ரயில் விபத்துக்கு பாஜக மட்டுமே பொறுப்பு.! இந்தியாவை காப்பாற்ற கூடிய ஒரே தலைவர் ஸ்டாலின் - ஆ.ராசா பேச்சு

By Raghupati R  |  First Published Jun 3, 2023, 10:33 PM IST

ரயில் விபத்தில் மத்திய அரசு ஸ்தம்பித்துள்ளது. மத்திய அரசு விளம்பரம் செய்வதிலேயே குறியாக உள்ளது. கவாச் விவகாரத்தில் ஏன் பிரதமர் கவனம் செலுத்தவில்லை ? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஆ.ராசா.


ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தில் எதிரே வந்த சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த நிலையில், யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் ஹவுரா அதிவிரைவு ரயிலும் அங்கு விபத்துக்குள்ளானது. மூன்று ரயில்கள் மோதிக் கொண்ட இந்த கோர விபத்தில் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பிறகு விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.

Tap to resize

Latest Videos

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய எம்பியும், திமுக துணைப்பொதுச்செயலாளருமான ஆ.ராசா,  “ரயில் விபத்தில் மத்திய அரசு ஸ்தம்பித்துள்ளது. மத்திய அரசு விளம்பரம் செய்வதிலேயே குறியாக உள்ளது. கவாச் விவகாரத்தில் ஏன் பிரதமர் கவனம் செலுத்தவில்லை ? ரயில் விபத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து மத்திய அரசுக்கு தெரியவில்லை. மம்தா பானர்ஜி நேருக்கு நேராக குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.

ஆனால் மத்திய ரயில்வே அமைச்சர் ஊமையாக இருக்கிறார். இது தான் பாஜக ஆட்சி ? பிரதமர் அயோத்தி கோவில் கட்டுறார், பார்லிமென்ட்டில் ஹிந்து அடையாளங்களை வைக்கிறார். 2024 தேர்தலில் மக்கள் மோதிக்கு தக்க பதில் அளிப்பார்கள். முந்தைய காலத்தில் இத்தகைய கோர விபத்துக்கள் நடந்தால் அந்ததந்த துறை அமைச்சர்கள் பொறுப்பேற்பார்கள். ரயில் விபத்துக்களை தவிர்க்க கவாச் தொழில்நுட்பம் என்ன ஆனது? இதற்கு யார் பொறுப்பு? என்று கேள்விகளை எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், விபத்துக்கு தனிநபர் காரணமா ? சிஸ்டம் காரணமா ? இவ்வளவு தொழில்நுட்பங்கள் உள்ள போதும் நடந்துள்ள இநந்த விபத்துக்கு பொறுப்பேற்கப்போவது யார்? மோசமான ரயில் விபத்துக்கு யார் காரணம் என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். ரயில் விபத்து நடந்த ஒரு மணிநேரத்துக்குள்ளாகவே ஒடிசா முதல்வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்பு கொண்டார். தமிழக அமைச்சர்கள் சில நாட்கள் ஒடிசாவில் தங்கி இருந்து மீட்புப் பணிகளை மேற்கொள்வார்கள். இந்தியாவை மதவாதம், ஊழல்களில் இருந்து காப்பாற்ற செயல்பட்டு வரும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் தான்” என்று பேசினார் ஆ.ராசா.

இதையும் படிங்க..ஒரே பாதையில் வந்த ரயில்கள்.. சிக்னல் பிரச்னை.! கோரமண்டல் ரயில் விபத்தில் நடந்தது என்ன?

இதையும் படிங்க..ரயில் விபத்தில் தமிழர்கள் எத்தனை பேர் பலி.? ஒடிசாவில் இருக்கும் தமிழ்நாடு அதிகாரிகள் சொன்ன முக்கிய தகவல்!!

click me!