கடமையை செய்.. அவமானப்படு.. திமுக எம்எல்ஏவால் மிரட்டப்பட்ட அசிஸ்டென்ட் கமிஷ்னர்..!

By Selva KathirFirst Published May 18, 2021, 11:14 AM IST
Highlights

செல்லும் இடமெல்லாம் சமூக நீதி குறித்து பாடம் எடுக்கும் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ எழிலன் சாதாரண நீதி கூட இல்லாமல் பலர் முன்னிலையில் அசிஷ்டென்ட் கமிஷ்னர் ஒருவரை மிரட்டியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

செல்லும் இடமெல்லாம் சமூக நீதி குறித்து பாடம் எடுக்கும் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ எழிலன் சாதாரண நீதி கூட இல்லாமல் பலர் முன்னிலையில் அசிஷ்டென்ட் கமிஷ்னர் ஒருவரை மிரட்டியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் திமுகவின் எழிலன். இவர் டாக்டர் வேறு. அண்மையில் கொரோனா தொடரபான தமிழக அரசின் ஆலோசனை குழுவில் திமுக சார்பில் எழிலனுக்குத்தான் இடம் கொடுத்திருந்தார் மு.க.ஸ்டாலின். இதுதவிர செல்லும் இடங்களில் எல்லாம் சமூக நீதி குறித்து பாடம் எடுப்பதால் பெரியாரிய ஆதரவாளர்கள், முற்போக்காளர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் மத்தியில் எழிலனை ஒரு கதாநாயகன் போல் அண்மைக்காலமாக உருவகப்படுத்தி வருகிறார்கள். ஆனால் எழிலன் சமூக நீதி பற்றி அல்ல சாதா நீதி பற்றி கூட பேச தகுதி இல்லாதவர் என்பது அவரது செயல் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வீட்டிற்கு புறப்பட தயாராக இருந்தார். இதனை அடுத்து அவரது பாதுகாப்பு வாகனங்கள் அடங்கிய கான்வாய் அலெர்ட் செய்யப்பட்டது. பொதுவாக முதலமைச்சரின் கான்வாய் இருக்கும் பகுதிக்குள் யாருக்கும் அனுமதி வழங்கப்படுவது இல்லை. ஆனால் திமுக எம்எல்ஏ எழிலன் திடீரென கான்வாய் இருக்கும் பகுதிக்குள் நுழைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆணையர் கொடிலிங்கம், நீ யாரு, எங்கே உள்ளே போற? என்று கேட்டுள்ளார்.

அதற்கு டென்சன் ஆன எம்எல்ஏ எழிலன், முறைத்துக் கொண்டே இந்த இடத்தில் இருந்து நேராக முதலமைச்சர் கான்வாய்க்குள் நுழைந்துவிட்டார். பிறகு முதலமைச்சர் சென்ற பிறகு திரும்பி வந்த எழிலன், மறுபடியும் காவல் பணியில் இருந்த காவலர்கள் பகுதிக்கு வந்து யார் அது, என்னை பார்த்து யார் நீ என்று கேட்டது என்று சலம்பியுள்ளார். ஆனால் சிறிதும் அச்சம் இல்லாமல் அங்கு வந்த உதவி ஆணையர் கொடிலிங்கம், தான் தான் என்று கூறியுள்ளார். ஒரு எம்எல்ஏவை பார்த்தே யார் என்று கேட்பீர்களா? என்று பதிலுக்கு எழிலன் குரலை உயர்த்த, எனக்கு நீங்கள் எம்எல்ஏ என்று தெரியாது என்று கொடிலிங்கம் ஒரே போடாய் போட்டார்.

பாதுகாப்பு பணியில் இருந்தால் யார் யார் எம்எல்ஏ என்றெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று உதவி ஆணையர் கொடிலிங்கத்தை மிரட்டும் தொனியில் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் எழிலன். ஆனால் தான் தனது கடமையை மட்டுமே செய்ததாக பதில் அளித்துவிட்டு சென்றார் கொடிலிங்கம். இதனிடையே முதலமைச்சரின் பாதுகாப்பின் போது ஒரு புரட்டகால் மிக கண்டிப்புடன் பின்பற்றப்படும். அது அவரது வாகன அணிவகுப்பில் அனுமதிக்கப்பட்டவர்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. இந்த அடிப்படையில் தான் ஒருவர் கான்வாய்க்குள் செல்லும் போது உதவி ஆணையர் கொடிலிங்கம் தடுத்து நிறுத்தியுள்ளார்.

பாதுகாப்பு நடைமுறைகளை மீறி முதலமைச்சர் அருகே செல்வது எம்எல்ஏவாக இருந்தாலும் சரி, அமைச்சராக இருந்தாலும் சரி அது மிகப்பெரிய தவறு. இதற்காக எழிலன் மீது போலீசார் வழக்கே பதிவு செய்யலாம். ஆனால் நடைமுறை இப்படி இருக்க, பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றாமல் அடாவடியாக முதலமைச்சர் அருகே சென்றதோடு எம்எல்ஏக்களை எல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று உதவி ஆணையரை எழிலன் மிரட்டுவது தான் சமூகநீதியா? என்று அவரை ஆதரிப்பவர்கள் விளக்க வேண்டும்.

click me!