“திமுகவினரை சட்டமன்றத்தில் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும்…” - புதுச்சேரி அதிமுக அன்பழகன் பரபரப்பு பேச்சு

 
Published : Mar 02, 2017, 09:33 AM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
“திமுகவினரை சட்டமன்றத்தில் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும்…” - புதுச்சேரி அதிமுக அன்பழகன் பரபரப்பு பேச்சு

சுருக்கம்

dmk Should have been disqualified

புதுச்சேரி அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நேற்று இரவு சுதேசி ஆலை அருகே நடைபெற்றது. புதுச்சேரி சட்டமன்ற அதிமுக தலைவர் அன்பழகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

ஜெயலலிதா ஆளுமை சக்தி மிக்க தலைவராக இருந்து வந்தார். அவர் வழி நடத்தி வந்த அதிமுக அரசை கலைப்பதற்கு திமுக, காங்கிரஸ் பல்வேறு சதி செயல்களை, பொதுச் செயலாளர் சசிகலா முறியடித்து விட்டார்.

தமிழக சட்டமன்ற வாக்கெடுப்பில், திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால், அரசு பெருந்தன்மையோடு விட்டு விட்டது.

அப்படியும் அதிமுக அரசை கலைக்க, குடியரசுத் தலைவர், சோனியா காந்தியுடன் ஸ்டாலின் சந்தித்து இருக்கிறார். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என திமுக வைத்த கோரிக்கைக்கு ஏற்றபடி காங்கிரஸ் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலரை அழைத்து ஜெயலலிதா உடல்நிலை குறித்து விசாரித்து 10 நாட்களுக்கு ஒருமுறை ஏன் தகவல் வெளியிடவில்லை. தற்போது ஏன் சிபிஐ விசாரணை கேட்கிறார்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு