ஆளுங்கட்சிக்கு எதிராக போராட்டத்தில் குதித்த திமுக எம்எல்ஏவால் பரபரப்பு..!

By vinoth kumarFirst Published Oct 8, 2021, 2:11 PM IST
Highlights

திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரி பேருந்து நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. குடியிருப்பு பகுதி, முருகன் கோவில், தனியார் பள்ளிகள் அமைந்துள்ள பகுதியில் இந்த டாஸ்மாக் கடை இருப்பதால் பல்வேறு தரப்பினரும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தனர்.

திருப்பூரில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி ஆளுங்கட்சிக்கு எதிராக திமுக எம்எல்ஏ தலைமையில் பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரி பேருந்து நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. குடியிருப்பு பகுதி, முருகன் கோவில், தனியார் பள்ளிகள் அமைந்துள்ள பகுதியில் இந்த டாஸ்மாக் கடை இருப்பதால் பல்வேறு தரப்பினரும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சுமார் 10 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள மக்கள் போராட்டம் நடத்தி கோரிக்கை  விடுத்து வருகின்றனர். ஆட்சி மாறினாலும் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. 

இதையும் படிங்க;- கபில்சிபல் இப்படி விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.. ரவுசு காட்டும் சீனியரை ரவுண்ட் கட்டும் அழகிரி.!

 இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் அப்பகுதிக்கு வந்த திருப்பூர் தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏ செல்வராஜிடம் டாஸ்டாக் கடையை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர். அவரும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனையடுத்து, ஒருவழியாக டாஸ்மார்க் கடை மூடப்பட்டு விடும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடை  திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், டாஸ்மாக் கடையில் லாரியில் வந்த மதுபான பெட்டிகளைக் கடைக்குள் அடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். உடனே அங்கு மக்கள் திரண்டதால் உடனே அந்த இடத்திற்கு எம்.எல்.ஏ செல்வராஜும் நேரடியாக வந்தார். அவர் மதுபான பெட்டிகளை இறக்குவதை நிறுத்தச் சொன்னதால் அந்த லாரியும் மதுபான பெட்டிகளை இறக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. 

இதையும் படிங்க;-  கோயம்பேடு பேருந்து நிலையத்தை மிஞ்சிய வண்டலூர் புதிய பேருந்து நிலையம்.. அசர வைக்கும் புதிய வரைபடம் வெளியானது.!

இதுகுறித்து அங்கிருந்த மேற்பார்வையாளரிடம் கேட்டபோது மது பாட்டில்களை விற்பனை செய்த பின்னர் டாஸ்மாக் கடையை மூடி விடுவதாக தெரிவித்தனர். ஆனால், இதனை ஏற்க மறுத்த திமுக எம்எல்ஏ செல்வராஜ் முழுவதுமாக காலி செய்த பின்னரே தான் அந்த இடத்திலிருந்து செல்லப்போவதாக காவல்துறையினரிடம் தெரிவித்தார். அதன்பின்னர் பாரையும் காலி செய்ய கூறியதன் பேரில் உடனடியாக அனைத்து சாமான்களையும் வேனில் ஏற்றிக்கொண்டு சென்றனர். இதனையடுத்து, கோவை மண்டல மேலாளர் கோவிந்தராஜுலு அங்கு வந்து எம்.எல்.ஏ.விடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், லாரியைக் கொண்டுவந்து கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை ஏற்றி குடோனுக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார். பின்னர் கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகள் லாரியில் ஏற்றப்பட்டன.

click me!