சென்னை துறைமுகம் தொகுதி திமுக எம்எல்ஏ சேகர்பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை துறைமுகம் தொகுதி திமுக எம்எல்ஏ சேகர்பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் இந்தியாவில் ருத்தரதாண்டவம் ஆடி வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளனர். சில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களை ஒப்பிடும் போது தற்போது கொரோனா பரவல் குறைவாகவே இருக்கிறது. இருப்பினும், உருவாறிய புதிய கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் மக்கள் செயல்பட வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை துறைமுகம் தொகுதி திமுக எம்எல்ஏ சேகர்பாபு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பம்பரமாக சுழன்று சேகர்பாபு வேலை பார்த்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.