சிட்டாய் பறந்த சிட்டிங் MLA.. ஸ்டாலினை சீண்டும் கு.க.செல்வம்.. பாஜகவுடன் நெருங்கியது ஏன்? பின்னணியில் உதயநிதி

By Selva KathirFirst Published Aug 5, 2020, 9:58 AM IST
Highlights

கு.க. செல்வம் திமுகவில் ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக இருந்தவர்களில் ஒன்று. கலைஞர் இருக்கும் போதே ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர்களும் ஒருவராக அறியப்பட்டவர் கு.க.செல்வம். சென்னைக்குள் ஸ்டாலின் எங்கு சென்றாலும் அவர் காரில் ஏறி அமரக்கூடிய ஒரு சிலரில் கு.க.செல்வமும் ஒன்று. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதிக்கு சென்ற நிலையில் தனது ஆயிரம் விளக்கு தொகுதியை கு.க.செல்வத்திற்காக விட்டுக் கொடுத்தவர். 

சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர்கள் பதவிக்கு சிற்றரசுவை நியமித்தால் என்ன நடக்கும் என்பதை ஏற்கனவே ஸ்டாலின் யூகித்து வைத்திருந்தாலும் உதயநிதி ஸ்டாலின் இந்த விஷயத்தில் பின்வாங்காதது தான் அந்த கட்சிக்கு தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கு.க. செல்வம் திமுகவில் ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக இருந்தவர்களில் ஒன்று. கலைஞர் இருக்கும் போதே ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர்களும் ஒருவராக அறியப்பட்டவர் கு.க.செல்வம். சென்னைக்குள் ஸ்டாலின் எங்கு சென்றாலும் அவர் காரில் ஏறி அமரக்கூடிய ஒரு சிலரில் கு.க.செல்வமும் ஒன்று. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதிக்கு சென்ற நிலையில் தனது ஆயிரம் விளக்கு தொகுதியை கு.க.செல்வத்திற்காக விட்டுக் கொடுத்தவர். அதோடு இல்லாமல் பிரச்சாரத்தின் போது ஆயிரம்விளக்கில் எனது நிழலை நான் நிப்பாட்டியுள்ளேன் என்று பேசி கு.க.செல்வத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர்.

சென்னையில் திமுகவிற்காக களப்பணி ஆற்றக்கூடிய வெகு சிலரில் கு.க.செல்வமும் ஒருவர். கு.க.செல்வம் வயதை ஒத்த மா.சுப்ரமணி, சேகர் பாபு போன்றோர் எல்லாம் மாவட்டச் செயலாளர் ஆகி அடுத்த தேர்தலுக்கான எம்எல்ஏ சீட்டையும் உறுதி செய்து கொண்டனர். ஆனால் கு.க.செல்வத்திற்கு அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பே மிக மிக குறைவு என்று கூறப்படுகிறது. ஏனென்றால் ஆயிரம் விளக்கு தொகுதி உதயநிதிக்காக தயாராகி வருகிறது. அங்கு ஏற்கனவே உதயநிதி தனக்கு நெருக்கமானவர்களை நியமித்து தேர்தல் பணிகளை துவங்கிவிட்டார்.

இதனால் ஆயிரம் விளக்கு தொகுதி தனக்கு கிடையாது என்பதை கு.க.செல்வம் உறுதிப்படுத்திக் கொண்டார். ஆயிரம் விளக்கு தொகுதி இல்லாமல் வேறு எந்த தொகுதியை பெற வேண்டும் என்றாலும் அதற்கு மாவட்டச் செயலாளரின் அனுக்கிரகம்முக்கியம், அல்லது மாவட்டச் செயலாளராகவே இருக்க வேண்டும். இந்த சூழலில் ஜெ அன்பழகன் இருந்திருந்தால் அவர் மூலம் நுங்கம்பாக்கம் போன்று ஏதோ ஒரு தொகுதியை கு.க.செல்வம் வாங்கியிருப்பார் என்கிறார்கள். ஆனால் அவர் மறைவுக்கு பிறகு தனக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றால் மாவட்டச் செயலாளர் பதவியை எதிர்பார்த்து இருந்தார்.

ஆனால் உதயநிதி தலையீட்டில் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் பதவி அவரது ஆதரவாளர் சிற்றரசுவுக்கு சென்றுவிட்டது. இதன் மூலம் தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி இல்லை. மேலும் எம்எல்ஏ சீட்டுக்கும் சிற்றரசுவிடம் சென்று நிற்க வேண்டும் என்கிற மன உளைச்சலுக்கு கு.க.செல்வம் ஆளாகியுள்ளார். மேலும் இந்த விஷயம் தொடர்பாக ஸ்டாலினிடம் பல முறை கு.க.செல்வம் பேசியதாகவும் சொல்கிறார்கள். ஆனால் ஸ்டாலின் மாவட்டச் செயலாளர் நியமன விவகாரத்தில் இனி பேச வேண்டாம், கொஞ்சம் நாட்கள் போகட்டும் பார்க்கலாம் என்கிற ரீதியில் பதில் அளித்துள்ளார்.

மேலும் எம்எல்ஏ சீட் விவகாரத்தை பொறுத்தவரை சபரீசனை அணுகிய  நிலையில் தற்போது தான் இந்த விஷயங்களில் தலையிடுவதில்லை என்று அவர் கைவிரித்துள்ளார். உதயநிதி அருகே கூட கு.க.செல்வத்தால் நெருங்க முடியவில்லை என்றும் சொல்கிறார்கள். இதனை அவமானமாக கருதியே திமுகவையும், ஸ்டாலினையும் அவமானப்படுத்த கு.க.செல்வம் முடிவு செய்துள்ளார். பாஜகவில் தனக்கு எதிர்காலம் இல்லை என்பது கு.க.செல்வத்திற்கு நன்கு தெரியும். அதிமுவிற்கு சென்றால் கூட அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற முடியும். ஆனாலும் பாஜகவை பொறுத்தவரை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தாலும் வெற்றி வாய்ப்பு இல்லை.

இருந்தாலும் அதிமுகவை தவிர்த்து கு.க.செல்வம் பாஜகவை அணுகியது ஸ்டாலினை எரிச்சல் அடைய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்கிறார்கள். அதிமுகவில் திமுக பிரமுகர் இணைவது ஒரு பெரிய விஷயம் இல்லை. ஆனால் சிட்டிங் எம்எல்ஏ ஒருவர் தலைமையை மீறி பாஜக மேலிடத்துடன் நெருங்குவது ஸ்டாலின் தலைமைக்கு விடுக்கும் சவால். இதன் மூலம் ஸ்டாலினை பலவீனம் அடைய வைக்க முடியும், தன்னை அவமானப்படுத்தியவர்களை பழி தீர்க்க முடியும் என்று கு.க.செல்வம் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என்கிறார்கள்.

click me!