போறபோக்க பாத்தா தமிழகத்தில் தாமரை மலர்ந்திடுமோ? பாஜகவில் இணைந்த திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்.?

By vinoth kumarFirst Published Aug 4, 2020, 5:58 PM IST
Highlights

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏவும், தலைமைச் செயலாளராகவும் உள்ள கு.க.செல்வம் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏவும், தலைமைச் செயலாளராகவும் உள்ள கு.க.செல்வம் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். 

சென்னை மேற்கு மாவட்டத்தின் மாவட்டச் செயலாளராக இருந்த ஜெ. அன்பழகன் ஜூன் 10ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்குப் பின் அப்பதவிக்கு யார் என்று திமுகவுக்குள் கடும் போட்டி நிலவியது. இதில், ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவரும் அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த ஆயிரம் விளக்கு தொகுதியின் இப்போதைய எம்.எல்.ஏ.வாக இருப்பவருமான கு.க. செல்வத்துக்கு பதவி கிடைக்கும் என்று முதலிலேயே பேசப்பட்டது. 

இந்நிலையில், சென்னை மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான சிற்றரசு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்தில் பகுதிச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. சில நாட்களுக்கு முன் சிற்றரசு நடத்திய அறிமுகக் கூட்டத்திலும் கு.க. செல்வம் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், ரகசியமாக பாஜக தலைவர் முருகனுடன் டெல்லி சென்ற செல்வம், இன்று காலை பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதர் ராவ் வீட்டில் முருகனோடு ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் திமுக எம்எல்ஏ கு.க. செல்வம் பாஜகவில் இணைந்தார். கு.க.செல்வத்துக்கு பாஜகவில் முக்கியமான பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

click me!