திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகனின் உடல்நிலை மோசம்... போராடும் மருத்துவர்கள்..!

Published : Jun 09, 2020, 12:42 PM IST
திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகனின் உடல்நிலை மோசம்... போராடும் மருத்துவர்கள்..!

சுருக்கம்

சிறுநீரக கோளாறு மோசமடைந்தது மட்டுமின்றி, இதய செயல்பாடும் மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜெ.அன்பழகனுக்கு ரத்த அழுத்தத்தை சீராக வைக்க மருந்துகள் அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திமுக சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான ஜெ.அன்பழகன் உடல்நலக் குறைவால் கடந்த 2-ஆம் தேதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. சிறுநீரக கோளாறு, தீவிர மூச்சு திணறல் காரணமாக வென்டிலேட்டர் உதவியுடன் 90 சதவீதம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.

அடுத்த 2 நாட்களில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு 40 சதவீத ஆக்சிஜன் மட்டும் செலுத்தப்பட்டு வந்த நிலையில், திங்கட்கிழமை மாலை முதல் மீண்டும் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிறுநீரக கோளாறு மோசமடைந்தது மட்டுமின்றி, இதய செயல்பாடும் மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெ.அன்பழகனுக்கு ரத்த அழுத்தத்தை சீராக வைக்க மருந்துகள் அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

திருவனந்தபுரம் வெற்றியால் உற்சாகத்தில் பாஜக..! தமிழகம்- மேற்கு வங்கத்துக்கு டார்கெட்..!
50 தொகுதிகளை கேட்டு அடம் பிடிக்கும் பாஜக.. முப்பதே ஓவர்.. கறார் காட்டும் எடப்பாடி..!