தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து.. அனைவரும் ஆல் பாஸ்.. முதல்வர் பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Jun 9, 2020, 12:36 PM IST
Highlights

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும், மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும், மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால், கொரோனா அச்சத்தால் மாணவர்களை பெற்றோர்கள் அனுப்பலாமா வேண்டாமா என்பது குறித்து குழப்பத்தில் இருந்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, நீதிபதிகள்  9 லட்சம் மாணவர்கள், 3 லட்சம் ஆசிரியர்கள், காவல்துறை, வருவாய் துறையினரை இக்கட்டான நிலைக்கு உள்ளாக்க வேண்டுமா? பொதுமுடக்க காலத்திலேயே 10ம் வகுப்பு தேர்வை நடத்த என்ன அவசியம்? பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலையில் முடிவெடுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை நீங்களே மீறுவீரர்களா? லட்சக்கணக்கான மாணவர்களின் நலனில் ஏன் ரிஸ்க் எடுக்கிறீர்கள்? பொது முடக்க காலத்திலேயே 10ம் வகுப்பு தேர்வை நடத்த என்ன அவசியம் உள்ளது என நினைக்கிறீர்கள்? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். மேலும். நீதிபதிகள் ஊரடங்கில் டாஸ்மாக்கை திறப்பதுபோல் அல்ல 10ம் வகுப்பு பொதுத்தேர்வு. டாஸ்மாக் திறப்பதும் பள்ளி தேர்வும் வேறு வேறானவை என்றனர். 

மறுபுறம் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், வைகோ, டிடிவி.தினகரன் மற்றும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்களும் 10ம் வகுப்பு தேர்வை நடத்த எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிவையில், இன்று தலைமை செயலகத்தில் முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். 

இந்நிலையில், தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஏற்கனவே 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தேர்வை ரத்து செய்து ஆணை பிறப்பித்துள்ளார். மேலும், காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80% மதிப்பெண் அளிக்கப்படும். எஞ்சிய 20% மதிப்பெண்கள் மாணவர்களின் வருகை அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல், 11ம் வகுப்பு தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள 12ம் வகுப்பு தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

click me!