
ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டம் செயல்படுத்தப்படுவதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கிராம மக்களும்,இளைஞகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாளுக்கு நாள் இப்போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருவதோடு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நேற்று நெடுவாசலில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக திருமயம் தொகுதி திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான ரகுபதி அங்கு வந்தார்.
அப்போது கிராம மக்களும், போராட்டத்தில் பங்கேற்றவர்களும் தகுபதிக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். திமுக ஆட்சிக்காலத்தில் தான் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது என தெரிவித்த போராட்டக்காரர்கள் ரகுபதி அங்கு வரக்கூடாது என முழக்கங்கள் எழுப்பினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரகுபதி தனது ஆதரவாளர்களுடன் உடனடியாக அங்கிருந்து வெளியேறினார்,
பெரும்பாலான அதிமுக எம்எல்ஏக்கள் சசிகலாவுக்கு ஆதரவி தெரிவித்ததால் அந்தந்த தொகுதி மக்களால் விரட்டி அடிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது திமுக எம்எல்ஏ ஒருவர் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.
இது பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்றே தெரிகிறது.