அங்க கை வச்சு இங்க கை வச்சு கடைசில திமுக அமைச்சர் தம்பி வீட்டிலேயே கொள்ளை..!

Published : Aug 11, 2021, 07:32 PM IST
அங்க கை வச்சு இங்க கை வச்சு கடைசில திமுக அமைச்சர் தம்பி வீட்டிலேயே கொள்ளை..!

சுருக்கம்

தூத்துக்குடியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தம்பி வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தம்பி வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே தண்டுபத்தைச் சேர்ந்தவர் சுதானந்தன்(55). மருத்துவரான இவர் தூத்துக்குடியில் தொழில் செய்து வருகிறார். தூத்துக்குடி கேடிசி நகரில் வசிக்கும் இவர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சகோதரர் ஆவார். 3 நாட்களுக்கு முன்பு தண்டுபத்தில் நடந்த கொடை விழாவுக்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சுதானந்தன் சென்றுவிட்டார்.  

இன்று காலை அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டை பார்த்த போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்தன. உடனே தண்டுபத்தில்  இருந்த  சுதானந்தனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதுகுறித்து அவர் தூத்துக்குடி சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

வீட்டின் பீரோக்களும் , லாக்கரும்  உடைக்கப்பட்டு கிடந்தன. பீரோவிலிருந்த துணிமணிகள் மற்றும் பொருட்கள் வெளியே வாரி இறைக்கப்பட்டிருந்தன. நகை, பணம் கொள்ளை போனது எவ்வளவு என்று தெரியவில்லை. சுதானந்தன் ஊரிலிருந்து வந்ததும் தான் எவ்வளவு நகை, பணம் கொள்ளை போனது என்பது தெரியவரும், மர்ம நபர்கள் கண்டுபிடிக்க மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

இஸ்லாமிய நாடுகளில் மோடி, யூத நாடுகளில் ஜெய்சங்கர்..! உலக அளவில் இந்தியாவின் ராஜதந்திர வியூகம்..!
குனிந்து கும்பிடும் போடும் உங்களுக்கு ‘அதிமுக’ என்ற பெயர் எதற்கு? வாய் திறக்காத இபிஎஸ்க்கு எதிராக முதல்வர் காட்டம்