திமுகவின் அரசியல் நாகரீகம்...!!! - பொதுக்குழுவில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி.... சோவுக்கும் மரியாதை

First Published Jan 4, 2017, 9:43 AM IST
Highlights


திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்து வருகிறது. இதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும், நடிகர் மற்றும் அரசியல் விமர்சகர் சோ.ராமசாமிக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

திமுக பொதுக்குழு கூட்டம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற இருந்த்து. ஆனால், திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு இன்று, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.

திமுக பொது செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்பி உள்பட முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அரசியல் விமர்சகர் சோ.ராமசாமி, பிடல் காஸ்ட்ரோ, திமுக துணை பொது செயலாளர் சர்றகுணம் பாண்டியன் ஆகியோரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து, பொதுக் கூழு நடை பெற்று வருகிறது.

இந்த கூட்டம் பொருளாளர் ஸ்டாலினை முன்னிலை படுத்தி நடத்தப்படுகிறது. இதில், திமுகவின் செயல் தலைவராக அவர் நியமிக்கப்பட உள்ளார். இதன் மூலம் சுமார் 15 ஆண்டு மன ஆசை இன்று நிறைவேறுகிறது.

இதை தொடர்ந்து கட்சியின் அனைத்து பணிகள் குறித்து முடிவெடுப்பது ஸ்டாலின் கையில்தான் உள்ளது. இதைதொடர்ந்து அழகிரியோ அல்லது கனிமொழியோ கட்சியில் ஸ்டாலினை கேட்காமல் எந்த பணியிலும் ஈடுபட முடியாது என பேசப்படுகிறது.

ஆனால், ராஜாத்தி அம்மாள் துணையுடன் துணை பொதுசெயலாளர் பதவியை, இந்த கூட்டத்திலேயே கனிமொழியும் பெற்று விடுவார் என மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர். பல ஆண்டுகளாக கட்டி காப்பாற்றிய திமுகவில், தலைவர் கருணாநிதி பங்கேற்காமல் நடக்கும் முதல் பொதுகுழு கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!