திமுக தேர்தல் அறிக்கையின் 259 பாயின்ட், திமுகவிற்கு தற்போது வில்லனாக மாறியுள்ளது

By Asianet TamilFirst Published Mar 27, 2021, 2:22 PM IST
Highlights

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பிற சாதி பெண்களை திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் 8 கிராம் தங்க காசு வழங்கப்படும் என்று தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பிற சாதி பெண்களை திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் 8 கிராம் தங்க காசு வழங்கப்படும் என்று தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிரச்சாரத்தின் போது, தி.மு.க வேட்பாளர்களை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி கேள்வி எழுப்புவதோடு, தி.மு.கவினரை விரட்டியடிக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. 

தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் 259வதாக குறிப்பிடப்பட்டுள்ள அம்சத்தில், “கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் மணமக்களில் ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிற இனத்தவரை மணந்து கொண்டால் 60 ஆயிரம் ரூபாய் நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்கக் காசு வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தமிழக மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அமைதியாக உள்ள தமிழகத்தில் இளைஞர்களை தூண்டி , சாதிய மோதல்களை உருவாக்க தி.மு.க திட்டமிட்டுள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர். தி.மு.கவின் இந்த அறிவிப்பு பெண்களை இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளதாக பெண்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தி.மு.க வேட்பாளர்கள் பிரச்சாரங்களுக்கு செல்லும் இடங்களில் பொதுமக்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதன் காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இது குறித்து சமூக வலைதளங்களில் பொதுமக்கள் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். 

click me!