தொடரும் திமுக அட்ராசிட்டி...!! ஆயுத பூஜைக்கு மாமூல் வேட்டை ...?? வயது முதிர்ந்த தம்பதியரை புரட்டி எடுத்த மாதாவரம் வ.செ..!!

Published : Oct 11, 2019, 09:46 AM IST
தொடரும் திமுக அட்ராசிட்டி...!!  ஆயுத பூஜைக்கு மாமூல் வேட்டை ...?? வயது முதிர்ந்த தம்பதியரை  புரட்டி எடுத்த மாதாவரம் வ.செ..!!

சுருக்கம்

வயதான தம்பதியினரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும் எட்டி உதைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் சத்தமிடவே அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் தசரதனை மடக்கி பிடித்தனர். மேலும் புழல் காவல் நிலையத்தில் தசரதன் மீது புகார் அளிக்கப்பட்டள்ளது.   

மாதாவரம் துணை வட்டசெயலாளர் தசரதன் என்பவர் அங்குள் சூப்பர் மார்க்கெட்டிற்க்குள் நுழைந்து மாமூல் கேட்டு வயதான தம்பதியரை அடித்து உதைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை மாதாவரம் பகுதியில் வசித்து வருபவர் தசரதன்,  திமுக வில் 32 வது வட்ட துணை செயலாளாராக உள்ளார். மாதாவரம் பகுதியில் தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி அரசு அதிகாரிகளை மிரட்டியும்,தொழில் அதிபர்களை மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரெட்டை ஏரி லட்சுமி புரம் வில்லிவாக்கம் சாலை புதியதாக ஸ்ரீவாரி என்ற சூப்பர் மார்கெட் கடை கடந்த மாதம் 15 ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் ஆயுத பூஜை அன்று அங்கு மது போதையில் சென்ற தசரதன் என்னிடம் அனுமதி வாங்காமல் எப்படி கடையை திறந்தாய், எனக்கு கொடுக்க வேண்டியதை கொடு என்று தகராறில் ஈடுப்பட்டுள்ளார். 

அப்பொழுது அந்த கடையின் அருகே வசித்து வந்த முதியவர் முத்துவும், அவரது மனைவியும் தடுக்க முயன்றனர். அப்பொழுது அந்த வயதான தம்பதியினரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும் எட்டி உதைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் சத்தமிடவே அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் தசரதனை மடக்கி பிடித்தனர். மேலும் புழல் காவல் நிலையத்தில் தசரதன் மீது புகார் அளிக்கப்பட்டள்ளது. 
இதேபோல் மசாஜ் சென்டரில் பெண்ணை தாக்குவது, உணவகத்தில் தாக்குதல் நடுத்துவது என்பது இவரின் வாடிக்கை என்று அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.  கடந்த வாரம் திமுகவைச் சேர்ந்த முத்துவேல் என்பவர் கடன் வாங்கி தருவதாக கூறி 100 கோடி ஏமாற்றி மத்திய குற்றப்பிரிவு போலிசாரால் கைது செய்யப்பட்டார்  , அதே போல நேற்று முன்தினம் 11 சிறுமிக்கு பாலியியல் தொல்லை கொடுத்து எஸ்.எஸ்.பாண்டியன் என்ற திமுக பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் 

தற்பொழுது தன்னிடம் அனுமதி வாங்கவில்லை என சூப்பர் மார்கெட்டில் மது போதையில்  தகராறில் ஈடுப்பட்டு வயதான தம்பதியினரை தாக்கி இருப்பது பொதுமக்களையிடையே திமுக மீது வெருப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது தசரதன் முதியவரை தாக்கும் வீடியோ சமூக வளைத்தளங்களில் வைராலாகி வருகிறது.

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை