சாதி பார்க்கும் திமுக... சங்கடப்படும் உடன்பிறப்புகள்..!

Published : Dec 04, 2020, 02:42 PM IST
சாதி பார்க்கும் திமுக... சங்கடப்படும் உடன்பிறப்புகள்..!

சுருக்கம்

தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்துக் கொண்டு இருக்கிற பிரஷாந்த் கிஷோரின் 'ஐபேக்' நிறுவன ஊழியர்கள், வார்டு வாரியாகச் சென்று தி.மு.க., வட்ட நிர்வாகிகளை சந்தித்து, தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை வழங்கி வருகிறார்கள். 

அப்போது அந்தந்த வார்டுகளில் நிலவுற பிரச்னைகளை கேட்பதுடன் எந்த இடத்தில், எந்த ஜாதியினர் அதிகம் வசிக்கிறார்கள்? அந்த ஜாதியினர் எந்தக் கட்சிக்கு ஓட்டு போடுவார்கள்? அவர்களது ஓட்டுகளை பெற நாம் என்ன செய்ய வேண்டும்? என்பன உள்ளிட்ட விபரங்களை சேகரித்து வருகிறார்கள். இதை வைத்து தான், வாக்காளர் பட்டியல் தயாரிக்க திட்டம் வகுத்து இருக்கிறார்கள்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, இப்படி எல்லாம் கம்பெனி ஆலோசனையைக் கேட்டா ஐந்து முறை முதல்வராக இருந்தார்? தன் மீதும் தன் உழைப்பு மீதும் நம்பிக்கை இருக்க வேண்டும் என உடன்பிறப்புகள் தலையில் அடித்துக் கொள்கிறார்கள். 
 
PREV
click me!

Recommended Stories

இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை... கடைசியில் மண்டியிட்ட வங்கதேசம்..!
ஹமாஸை ஒழிப்பதில் நாங்களே தலைமை தாங்குவோம்.. அமெரிக்காவிடம் அடம்பிடிக்கும் பாகிஸ்தான் இராணுவம்..!