ஆளுநரை திரும்ப பெற வேண்டும்..! குடியரசுத் தலைவரிடம் மனு கொடுக்கும் திமுக கூட்டணி எம்பிக்கள்

By Ajmal Khan  |  First Published Nov 2, 2022, 8:37 AM IST

தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வரும் நிலையில் குடியரசு தலைவரை சந்தித்து முறையிட திமுக கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதற்காக திமுக கூட்டணி கட்சி எம்பிக்களுக்கு டிஆர் பாலு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.


தமிழக ஆளுநருக்கு எதிராக தீர்மானம்

தமிழகத்தில் ஆளுநராக செயல்பட்டு வரும் ஆர்.என்.ரவி தமிழக அரசின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகள் புகார் கூறி வருகின்றனர். தமிழக மக்களின் கோரிக்கையான நீட் விலக்கு மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதாக தெரிவிக்கப்பட்டது.  இதன் காரணமாக ஆளுநர் கொடுத்த தேனீர் விருந்தை முதலமைச்சர் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்தது. அரசு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் ஆளுநர் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை வெளிப்படுத்தும் வகையில் பேசியதாகவும் புகார் எழுந்தது. மேலும் திருக்குறளில் ஆன்மிகம் மறைக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் பேசியிருந்தார். இதற்க்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

Tap to resize

Latest Videos

உலகிலேயே மிகப்பெரிய கரகாட்ட கோஷ்டி அண்ணாமலை தான்..! அவர் பண்ணது வேற லெவல் காமெடி- செந்தில் பாலாஜி விளாசல்

ஆளுநருக்கு எதிராக கூட்டறிக்கை

இந்தநிலையில் தற்போது கோவை வெடி விபத்தை விமர்சித்து நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் உரையாற்றியுள்ளார். அதில் கோவை வெடிவிபத்து சம்பவத்தை தமிழக அரசு என்ஐஏக்கு வழக்கை மாற்றம் செய்ததில் காலம் தாழ்த்தியதாக புகார் கூறப்பட்டது. மேலும் எந்த ஒரு நாடும் ஒரு மத்த்தை சார்ந்து இருக்கும் எனவும் ஆளுநர் தெரிவித்து இருந்தார். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக கூட்டணி கட்சிகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில்,  ஆளுநர் பொறுப்பில் இருந்துகொண்டு அவர் அரசிலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுவதால்தான் இந்தளவுக்கு இதற்கு முக்கியத்துவம் தர வேண்டி உள்ளது. இதனை விடப் பெரிய பதவி எதையாவது எதிர்பார்த்து பா.ஜ.க. தலைமையை மகிழ்விக்க ஆர்.என்.இரவி அவர்கள் இப்படிப் பேசுவதாக இருந்தால், அவர் தனது ஆளுநர் பதவியை விட்டு விலகி விட்டு, இதுபோன்ற கருத்துகளைச் சொல்லட்டும். மாறாக, அப்பொறுப்பில் இருந்துகொண்டு பேசுவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது.. ஆளுநரா இல்லை ஆர்.எஸ்.எஸ் தொண்டரா ? கொந்தளித்த திருமாவளவன்

குடியரசு தலைவரை சந்திக்க திட்டம்

இந்தநிலையில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு திமுக கூட்டணி கட்சி எம்பிக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  ஆளுநர் ஆர்.என் ரவியை திரும்ப பெறுமாறு குடியரசு தலைவரிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அண்ணா அறிவாலயத்தில் உள்ள தீர்மானத்தை படித்து பார்த்து வருகிற நாளைக்குள் (3ஆம் தேதி )கையொப்பம் இடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் பாஜக வால் ஆட்டினால்! ஒட்ட நறுக்குவோம்! மத்தவங்க செய்றாங்களோ இல்லையோ நாங்க செய்வோம்!திமிரும் திருமா
 

click me!