என்னோடைய தலைவர் அனைவராலும் அறியபட்டவர்... அண்ணனுக்காக வரிஞ்சு கட்டிய தங்கச்சி..!

Published : Aug 13, 2019, 02:37 PM IST
என்னோடைய தலைவர் அனைவராலும் அறியபட்டவர்... அண்ணனுக்காக வரிஞ்சு கட்டிய தங்கச்சி..!

சுருக்கம்

பாரதிய ஜனதாவின் ஒரு கையாக அதிமுக செயல்பட்டு வருகிறது. மழையால் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்ற தனது மாநிலத்துக்கு வேண்டிய நிதிகளை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். 

பாரதிய ஜனதாவின் இன்னொரு கையாக அதிமுக செயல்படுகிறது என திமுக எம்.பி. கனிமொழி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக எம்.பி. கனிமொழி காஷ்மீர் தலைவர்களின் குடும்பத்தினரை வீட்டு சிறையில் வைத்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு தேவையான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அனைவராலும் அறியப்பட்ட தலைவர். ஆகையால், அவர் விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை. நீலகிரியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்லாதது ஏன்? அவரை யார் தடுத்தது என கேள்வி எழுப்பியுள்ளார். அங்கு மக்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். அரசாங்கம் சரியான எந்த நிவாரண உதவிகளும் செய்யவில்லை. மு.க.ஸ்டாலின் பாதிப்புகளை பார்த்துவிட்டு வந்து இருக்கிறார். இனியாவது அரசு நிவாரண பணிகளை துரிதமாக செய்யட்டும். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புயல், வெள்ளம் மற்றும் வறட்சி பாதிப்புகளுக்கு மத்திய அரசிடம் நிதி கேட்டு தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

பாரதிய ஜனதாவின் ஒரு கையாக அதிமுக செயல்பட்டு வருகிறது. மழையால் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்ற தனது மாநிலத்துக்கு வேண்டிய நிதிகளை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மத்தியில் ஆளும் பாஜக அரசு எந்த மசோதா கொண்டு வந்தாலும் அதற்கு ஆதரவாக வாக்களிக்கின்ற அ.தி.மு.க. தமிழகத்துக்கு வேண்டிய நியாயமான நிதியை பெற்றுத் தர வேண்டும். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கீழ்தரமாக பேசி இருக்கிறார். அதற்கு பதில் சொல்ல முடியாது என கனிமொழி கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!
வங்கதேச தேசத்தின் அடுத்த பிரதமராகும் ‘இருண்ட இளவரசர்’..? யார் இந்த ‘டேஞ்சரஸ்’ தாரிக் ரஹ்மான்..?