காங்கிரஸை கழட்டிவிட நினைக்குது தி.மு.க.: அடுத்தடுத்து ரிவிட் வைக்குது பி.ஜே.பி...

Asianet News Tamil  
Published : Nov 11, 2017, 06:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
காங்கிரஸை கழட்டிவிட நினைக்குது தி.மு.க.: அடுத்தடுத்து ரிவிட் வைக்குது பி.ஜே.பி...

சுருக்கம்

DMK join hands with BJp

தமிழக பி.ஜே.பி.க்கு டெல்லி தலைமை இட்டிருக்கும் ஒரே கட்டளை தங்கள் கட்சியை வளர்ப்பதை விட, தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை உடையுங்கள் என்பதுதான் போல. அதனால்தான் மோடி - கருணாநிதி சந்திப்புக்குப் பின் இதையே இலக்காக வைத்து வேகமெடுத்துக் கொண்டிருக்கிறது தமிழக பி.ஜே.பி. 

அக்கட்சியின் ராஜ்யசபா உறுப்பினரான இல.கணேசன் தி.மு.க. - காங்கிரஸ் உறவின் நடுவில் பட்டாசு கொளுத்திப் போடும் விதமாக “காங்கிரஸ் ஒரு தோல்வியடைந்த கட்சி. அதன் சித்தாந்தமெல்லாம் நீர்த்துப் போன சித்தாந்தம். காங்கிரஸ் கட்சி தேவையில்லாத சுமை என்று தி.மு.க.விலேயே பலர் நினைக்கிறார்கள்.

காங்கிரஸுக்கு ஒதுக்கிய இடங்களில் தி.மு.க. நின்றிருந்தால் நாம் வெற்றி பெற்றிருக்கலாம் என்ற எண்ணம் பல தி.மு.க.வினருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் தாங்கள் கழட்டி விடப்படுவோம் என்ற பயம் காங்கிரஸ்காரர்களை தொற்றிக் கொண்டு விட்டது.” என்று கொட்டித் தீர்த்திருக்கிறார். 

ஆனால் காங்கிரஸோ ‘டெல்லியில் எங்கள் சோனியாவும், மன்மோகனும், ராகுலும் மோடி உள்ளிட்ட பி.ஜே.பி. தலைவர்களுடன் அடிக்கடி சந்திப்பில் ஈடுபடுகிறார்கள் நாடாளுமன்றத்திலும், பல பொது நிகழ்வுகளிலும். அதற்காக அதை கூட்டணி முயற்சி என்றா தி.மு.க. நினைத்தது. அதனால் நாங்கள் பயப்படுகிறோம் என்பது தமிழக பி.ஜே.பி.யின் பேத்தல் கற்பனை.” என்று சொல்லி சமாளிக்கிறது. 
கத்திரிக்காய் முத்தட்டும், கடைத்தெருவுக்கு வரட்டும்!

PREV
click me!

Recommended Stories

5 ஆண்டுகால உழைப்பெல்லாம் வீண்..! அப்செட்டில் திமுகவினர்..! புலம்ப வைத்த அதிமுக ஓடுகாலிகள்..!
கொங்கில் டான் செந்தில் பாலாஜியா..? எஸ்.பி.வேலுமணியா..? 30 தொகுதிகளில் முரட்டு மோதல்..!