தேர்தல் களத்தில் எத்தனை அக்யூஸ்ட்டுகள் - முதலிடத்தில் திமுக

By Asianet TamilFirst Published Apr 2, 2021, 4:03 PM IST
Highlights

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் குற்ற பின்னணி கொண்ட வேட்பாளர்கள் திமுகவில் தான் அதிகமாக இருப்பதாக ஜனநாயக சீர்திருத்தத்திற்கான கூட்டமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது. திமுகவில் போட்டியிடும் வேட்பாளர்களில் 136 பேர் மீது அறிவிக்கப்பட்ட குற்றசாட்டுகள் இருப்பதாகவும், 50 பேர் மீது மிக கடுமையான குற்றச்சாட்டுகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.  
 
ஜனநாயக சீர்திருத்தத்திற்கான கூட்டமைப்பு (Association for Democratic Reforms)  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து குற்ற பின்னணி கொண்ட வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் சொத்து மதிப்புகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், திமுக வேட்பாளர்களில் 76% வேட்பாளர்கள் குற்ற பின்னணியுடன் இருப்பதாகவும் அதில் 26% வேட்பாளர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 136 வேட்பாளர்கள் குற்ற பின்னணி கொண்டவர்களாகவும், 50 வேட்பாளர்கள் மிக கடுமையான குற்றசாட்டுகளுக்கு ஆளானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், மாநிலத்திலேயே குற்ற பின்னணி கொண்ட குறைந்த அளவு வேட்பாளர்களை கொண்ட  கட்சியாக அதிமுக உள்ளது. அதிமுகவின் 191 வேட்பாளர்களில் 46 பேர் குற்ற பின்னணி கொண்டவர்களாக உள்ளனர்.

சொத்து மதிப்புகளை பொறுத்தவரை, திமுகவின் 178 வேட்பாளர்களில் 155 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அதே சமயம், காங்கிரஸ் கட்சியின் 21 வேட்பாளர்களின் 19 வேட்பாளர்கள் கோடிஸ்வரர்களாக உள்ளனர். தமிழகத்தில் அதிக கோடீஸ்வர வேட்பாளர்கள் கொண்ட கட்சியாக காங்கிரஸ் உள்ளது.

click me!