ஜெ.மரணத்திற்கு காரணமானவர்கள் திமுகவினரே.! அனல் பரத்தும் அமைச்சர் செல்லூர் ராஜூ.!

Published : Oct 27, 2020, 08:51 PM IST
ஜெ.மரணத்திற்கு காரணமானவர்கள் திமுகவினரே.! அனல் பரத்தும் அமைச்சர் செல்லூர் ராஜூ.!

சுருக்கம்

எதிர்க்கட்சித்தலைவர் விவசாயி வேடம் போடுகிறாராம். இதையெல்லாம் சிவாஜி பார்த்தால் என்ன செய்வார். ஸ்டாலினுக்கு ஒரு விவசாயியாக கூட நடிக்கத்தெரியவில்லை. உண்மை விவசாயிக்கும், நடிக்கும் விவசாயிக்கும் வித்தியாசம் உள்ளது என அனல் பரத்தியிருக்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ.  

    எதிர்க்கட்சித்தலைவர் விவசாயி வேடம் போடுகிறாராம். இதையெல்லாம் சிவாஜி பார்த்தால் என்ன செய்வார். ஸ்டாலினுக்கு ஒரு விவசாயியாக  கூட நடிக்கத்தெரியவில்லை. உண்மை விவசாயிக்கும், நடிக்கும் விவசாயிக்கும் வித்தியாசம் உள்ளது என அனல் பரத்தியிருக்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ.

பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ள மதுரைக்கு வரும் முதல்வருக்கு வரவேற்பு அளிப்பது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக மூன்றாவது முறையாக சந்திக்க உள்ள தேர்தல் இது, 10ஆண்டு ஆட்சியில் இருந்துவிட்டு மக்களை சந்திக்க போகிறோம். மக்கள் அரசின் மீது ஒரு குற்றம் குறைக்கூட சொல்லவில்லை. அது தான் எதிர்க்கட்சிகளுக்கு ஆண்டவன் போட்ட பிரேக். தீயசக்தியை கட்டுப்படுத்த அமானுய சக்தி இருப்பது போல கொரானா வந்துவிட்டது. ஒரு நன்மையும் செய்யாத கட்சி, மக்கள் விரோத கட்சி திமுக தான். எதையோ பேசி என்னமோ நாடகம் போட்டு பார்க்கிறார் ஸ்டாலின். அரசை குறை கூற ஏதாவது சிக்குமா என பார்க்கிறார். எதுவும் கிடைக்கவில்லை என்பதால் கோபத்தில் உள்ளார்.


ஜெயலலிதா இல்லாத போதும் சாதுர்யமாக செயல்பட்டு கட்சியை மட்டுமல்ல, நிலையான ஆட்சியையும் நடத்தி காட்டியவர் எடப்பாடி. சட்டமன்றத்தில் ரகளையில் ஈடுபட்ட போதும் நம்பியார் போல சிரித்துக்கொண்டு, கடந்து சென்றோம். சட்டையை கிழித்துக்கொண்ட போது ஸ்டாலினுக்கு போன இமேஜ் இன்னும் திரும்ப வரவில்லை. ஒவ்வொரு விஷயத்திலும் முதலமைச்சர் கோல் போட்டு வருகிறார்.
 


எதிர்க்கட்சித்தலைவர் விவசாயி வேடம் போடுகிறாராம். இதையெல்லாம் சிவாஜி பார்த்தால் என்ன செய்வார். ஸ்டாலினுக்கு ஒரு விவசாயியாக கூட நடிக்கத்தெரியவில்லை. உண்மை விவசாயிக்கும், நடிக்கும் விவசாயிக்கும் வித்தியாசம் உள்ளது. வடிவேலு சொல்வதை போல வரவில்லை என்றால் விட்டு விட வேண்டியது தானே. ஜெயலலிதா மரணத்திற்கு திமுகவே காரணம். மக்கள் மறதியை வைத்து ஆட்சிக்கு வரலாம் என திமுக நினைக்கின்றனர். ஜெயலலிதா மீது பொய் வழக்குப் போட்டு அவரை வேதனைப்படுத்தியவர்கள் திமுகவினர். ஜெயலலிதாவுக்கு மெரினாவில் கூட இடம் தரக்கூடாது என வழக்கு போட்டு அரசியல் செய்தவர். ஆனால் தற்போது ஜெயலலிதா இறப்புக்கு நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். அவர்களை அதிமுகவினர் நம்பக்கூடாது. திமுக என்ற தீயசக்தியை ஒழிக்க வேண்டும்”.

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!