
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், "தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்கிற ஆளுநரிடமிருந்து பட்டம் பெற முடியாது" என்று தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்த பிஹெச்டி மாணவி ஷீன் ஜோசப், ஆளுநர் ஆர்.என்.ரவியை புறக்கணித்து, அருகிலிருந்த துணைவேந்தரிடம் இருந்து பட்டத்தை பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ‘ ‘திமுகவின் கீழ்த்தரமான அரசியலை எல்லாம் கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது’’ எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தரங்கெட்ட நாடகங்களுக்கு திமுகவினர் கல்வி நிலையங்களை பயன்படுத்துகின்றனர். காலகாலமாக, கட்சியில் பெயர் வாங்க, திமுகவினர் அரங்கேற்றி வரும் தரங்கெட்ட நாடகங்களுக்கு, கல்வி நிலையங்களையும் பயன்படுத்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
திமுகவின் கீழ்த்தரமான அரசியலை எல்லாம், கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் தனது கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டும். திமுகவைப் பிடிக்காத மக்களே தமிழகத்தில் அதிகம். அவர்களும் இதே போன்று நடந்து கொண்டால், முதலமைச்சர் ஸ்டாலின் தனது முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்வார்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.