பிஜேபியை பார்த்து அஞ்சுகிறது திமுக.. ஜெ துணிச்சல் ஸ்டாலினுக்கு வரவே வராது.. பொளந்துகட்டிய சவுக்கு சங்கர்.

By Ezhilarasan BabuFirst Published Dec 1, 2021, 2:23 PM IST
Highlights

பல ஆண்டுகளாக சிறையில் வாடும் இஸ்லாமியர்களை விடுதலை விவகாரத்தில் திமுக அப்பட்டமாக பிஜேபியை பார்த்து பயப்படுகிறது என்றும், அவர்களை விடுதலை செய்தால் பாஜகவின் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என்ற  அச்சத்தில் திமுக உள்ளது என்றும் பத்திரிக்கையாளரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் விமர்சித்துள்ளார். 

பல ஆண்டுகளாக சிறையில் வாடும் இஸ்லாமியர்களை விடுதலை விவகாரத்தில் திமுக அப்பட்டமாக பிஜேபியை பார்த்து பயப்படுகிறது என்றும், அவர்களை விடுதலை செய்தால் பாஜகவின் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என்ற  அச்சத்தில் திமுக உள்ளது என்றும் பத்திரிக்கையாளரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் விமர்சித்துள்ளார். தேர்தலுக்கு முன்பாக இஸ்லாமியர்களின் வாக்கு தேவை என்பதால் ஸ்டாலின் அவர்களை விடுதலை செய்வோம் என கூறினார். ஆனால் இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு நிலைமை வேறு என்பதாலும், அவர்களை விடுதலை செய்தால் பாஜகவை எப்படி எதிர்கொள்வது என்ற தயக்கம் ஸ்டாலினிடம் உள்ளது என்றும் சங்கம் தெரிவித்துள்ளார். 

பாஜகவுக்கும் திமுகவுக்கும் இடையேயான பகை நீர்பூத்த நெருப்பாக இருந்து வருகிறது. இருபெரும் திராவிட கட்சிகளில் ஒன்றான அதிமுகவை அணைத்துக் கொண்ட பாஜக, திமுகவை  தொடர்ந்து எதிரியாகவே பாவித்து வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தந்தை பெரியார் போன்ற தலைவர்களை தொடர்ந்து பாஜகவினர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தும் பேசியும் வருகின்றனர். தமிழகத்தில் எச். ராஜா முதல் தேசிய அளவில் ஜே.பி நட்டா வரை திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். திமுக என்பது ஊழல் கட்சி, அது குடும்ப கட்சி என ஜே.பி நட்டா சமீபத்தில் திமுகவை பகிரங்கமாக விமர்சித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இதேபோல் தமிழக ஆளுநராக ஆர்.என் ரவி நியமிக்கப்பட்டபோது திமுகவின் கூட்டணி கட்சிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், திமுகவை இடையூறு செய்வதற்காகவே பிரத்யேகமாக நாகலாந்தில் இருந்த ஆர்.என் ரவியை தமிழகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்று விமர்சித்தனர். அதுபோன்ற சந்தேகத்திற்கு குரிய  நடவடிக்கைகளில் ஆவர் ஈடுபட்டால் அதை பொறுத்தக் கொள்ளமாட்டும் என்றும் எச்சரித்தனர். ஆனால் அதையும் மீறி அவர் ஆளுநராக பதவியேற்றார். ஆனால் ஸ்டாலின் ஆர்.என் ரவி உறவு இதுவரை சுமூகமாகவே இருந்து வருகிறது. ஆனாலும் பாஜகவினர் அடிக்கடி ஆளுநரை சந்தித்து திமுகவுக்கு எதிராக புகார் கொடுத்து வருவதை காணமுடிகிறது. எனவே எந்த நேரத்திலும் திமுக அரசுக்கு எதிராக ஆளுநர் நெருக்கடி கொடுக்கலாம் என்ற கருத்தும் ஒருபுறம் நிலவி வருகிறது. இந்நிலையில் சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் தமிழகத்தில் எழுந்துள்ளது. குறிப்பாக 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் விசாரணைக் கைதிகளாக இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதாவது தேர்தலுக்கு முன்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இஸ்லாமிய சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவித்திருந்த நிலையில் இந்த கோரிக்கை வலுத்துள்ளது.

ஆனால் தற்போது இந்த விவகாரத்தில் தொடர்ந்த தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது. எனவே இஸ்லாமிய அமைப்புகள் முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நிலை இதுகுறித்து பத்திரிகையாளரும் அரசியல் திறனாய்வாளருமான சவுக்கு சங்கர் திமுகவை விமர்சித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-  இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை விவகாரத்தில் ஸ்டாலின் பிஜேபி கண்டு அஞ்சுகிறார், தேர்தலுக்கு முன்பாக இஸ்லாமியர்களின் வாக்கு தேவையாக இருந்தது, எனவே வசதிக்கேற்ப நீண்ட நாட்களாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுவிப்போம் என அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் தற்போது இஸ்லாமிய சிறைக்கைதிகளை தவிர்த்து இதர கைதிகளை விடுவிப்பதாக கூறுகிறார். அப்படி என்றால் அவர் பிஜேபியை கண்டு அஞ்சுகிறார் என்றுதான் புரிந்துகொள்ள முடியும். இதற்கு வேறு எந்த காரணங்களும் இருப்பதாக சொல்லமுடியாது. பிஜேபியை பார்த்து திமுக பயப்படுகிறது.  தீவிரவாத முத்திரை உள்ளவர்களை விடுதலை செய்துவிட்டால் பாஜகவின் குற்றச்சாட்டுக்கு  ஆளாக நேரிடுமே என்றும், அதை அரசியல் ரீதியாக எப்படி எதிர்த்துப் போராடுவது என்ற துணிச்சல் ஸ்டாலின் அவர்களுக்கு இல்லை என்பதைத் தாண்டி வேறு எந்த காரணங்களும் இதில் இல்லை.

ஜெயலலிதா அவர்கள் இருந்திருந்தால் நீங்கள் என்ன சொல்வது இதோ நான் விடுவிக்கிறேன் என அவர்களை விடுவித்து இருப்பார். ஆனால் ஸ்டாலினுக்கு அந்த துணிச்சல் கிடையாது, உங்களுக்கு துணிச்சல் இல்லை என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம், ஆனால் தேர்தல் நேரத்தில் எதற்காக வாக்குறுதி கொடுத்தீர்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் நமது சமுதாயத்திற்கு நல்லது செய்வார்கள் என்ற நம்பிக்கையிலும், உங்கள் மீது இருந்த அனுதாபத்தினாலும்தானே உங்களுக்கு சிறுபான்மையின மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் இப்போது அது குறித்து எதுவும் கூறாமல் மௌனமாக ஸ்டாலின் இருந்து வருகிறார். மொத்தத்தில் அவர் பாஜகவை பார்த்து அஞ்சுகிறார் என்பதைத்தான் இது காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

click me!