AIADMK: அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்வில் மாற்றம்.. செயற்குழுவில் அதிரடி முடிவு..!

By vinoth kumarFirst Published Dec 1, 2021, 1:55 PM IST
Highlights

அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை சென்னை ராயப்பேட்டையிலிருக்கும் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் தலைமையில் தொடங்கியது. இதில், 11 தீர்மானங்கள், விதி எண் 20 (அ), விதி எண் 43 மற்றும் விதி எண் 45 ஆகிய விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு முறையில் மாற்றம் செய்ய சட்டவிதிகளில் திருத்தம் செய்யப்படுதாக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை சென்னை ராயப்பேட்டையிலிருக்கும் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் தலைமையில் தொடங்கியது. இதில், 11 தீர்மானங்கள், விதி எண் 20 (அ), விதி எண் 43 மற்றும் விதி எண் 45 ஆகிய விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

விதி 20 பிரிவு 2 சட்ட திருத்தம்:

இதுவரை கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். ஆனால், இனிவரும் காலங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட திருத்த விதிமுறைகளின் படி கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேற்படி கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரையும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை வாக்கின் மூலம் இணைந்தே தேர்வு செய்வார்கள்.

விதி 43 சட்டத்திருத்தம்:

இதுவரை கழக சட்ட விதிகளை இயற்றவும், திருத்தவும், நீக்கவும், பொதுக்குழு அதிகாரம் படைத்திருந்தது. இனிமேல் கழக சட்ட திட்ட விதிகளை இயற்றவும், திருத்தவும், நீக்கவும், பொதுக்குழு அதிகாரம் படைத்ததாகும். ஆனால் இந்த சட்ட திட்டங்களின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டிருக்கும் கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மட்டும் மாற்றுவதற்கும், திருத்துவதற்கும் முடியாது.

விதி 45 சட்ட திருத்தும்:

இதுவரை கழக திட்ட விதிகளில், மாற்றம் மேற்கொள்வதற்கும், விலக்கு அளிப்பதற்கும், கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு அதிகாரம் உண்டு. ஆனால், இனிவரும் காலங்களில் இந்த சட்ட திட்டங்களின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டிருக்கும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மட்டும் விலக்கு அளிப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை.

click me!