கொடுத்த வாக்குறுதிகளுக்கு எதிர்மறையாக திமுக செயல்படுகிறது... டிடிவி தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு!!

Published : May 15, 2022, 04:10 PM IST
கொடுத்த வாக்குறுதிகளுக்கு எதிர்மறையாக திமுக செயல்படுகிறது... டிடிவி தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு!!

சுருக்கம்

தமிழகத்தில் எதிர்க்கட்சியாக அதிமுக நன்றாக செயல்படுவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் எதிர்க்கட்சியாக அதிமுக நன்றாக செயல்படுவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவின் ஓராண்டு ஆட்சிக்காலம் என்பது தமிழக மக்களுக்கு சோதனை காலம் என அனைத்து விதத்திலும் நிரூபணமாகியுள்ளது. வீட்டு பெண்மணிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என கூறினார்கள். ஆனால் இதுவரை நிறைவேறப்படவில்லை. அதே போன்று சொத்து வரி உயர்வு  நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட பல வாக்குறுதிகளை திமுகவினர் கூறினார்கள். ஆனால் அதற்கு எதிர்மறையாக திமுகவினர் செயல்பட்டு வருகிறார்கள். மக்களை பாதிக்காத வகையில் நாங்கள் செயல்படுகிறோம் என திமுகவினர் கூறுகிறார்கள். ஆனால் மக்களை பாதிப்படைய செய்வது அவர்களின் நோக்கமாக உள்ளது.

ஆகவே திமுக வரும் காலங்களில் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுகவிற்கு மக்கள் ஒரு வாய்ப்பு தந்தார்கள். திமுக எப்போதும் திருந்தாது. அதனுடைய சுயரூபம் தற்போது வெளிப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்திற்கும் திமுக மூடுவிழா நடத்துகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் விடியல் ஆட்சி நடைபெறுகிறது என கூறினார். ஆனால் தமிழகத்தில் இருண்ட ஆட்சி தான் நடைபெற்று வருகிறது, அதுதான் உண்மை. தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக நன்றாக செயல்படுகிறது.

அதற்காக எங்களுடைய பங்காளிகளுக்கு ஆதரவாக பேசுகிறோம் என எடுத்துக் கொள்ளக்கூடாது. திமுகவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் போராட்டம் என அனைத்துக் கட்சிகளும் நடத்தி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, அமமுக இணையுமா என்ற உங்களுடைய யூகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. தேர்தல் வெற்றி, தோல்வி எங்கள் கட்சியை பாதிக்காது. இந்தித் திணிப்பை தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எந்த மொழியாக இருந்தாலும் அவர்கள் விருப்பப்பட்டு ஏற்க வேண்டும். இந்தித் திணிப்பை தற்போது உள்ள தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?
Government Subsidy: ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?