திமுக ஆமை..! நாங்கள் குதிரை..! அதிமுக பற்றி ரகுபதிக்கு என்ன கவலை...? ஜெயக்குமார் பதிலடி..!

Published : Dec 15, 2025, 03:02 PM IST
Jayakumar

சுருக்கம்

கொஞ்சம்கூட வாய் கூசாமல், ஸ்டாலினுக்கு பல்லக்கு தூக்கும், அதேபோல் எலியாக இருக்கிற உதயநிதிக்கு கூட பல்லக்கு தூக்கும், இதை விட ஒரு கேடுகெட்ட, மானங்கெட்ட, பணத்திற்காக, பதவிக்காக இப்படி பேசுவதைவிட வேறு அவமானம் உலகத்திலேயே இருக்க முடியாது.

தமிழ்நாடு, புதுவை, கேரளா சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் நபர்களுக்கு தலைமைக் கழகத்தில் இன்று வேட்புமனு விநியோகம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர் கலந்துகொண்டு அதிமுக விருப்ப மனு விநியோகத்தைத் தொடங்கிவைத்தனர்.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’கட்சியின் பொதுச் செயலாளர் உத்தரவின் படி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கேட்பவர்களுக்கு விருப்ப மனு விநியோகம் செய்யப்படுகிறது. இன்றைய எழுச்சியை பார்க்கும் பொழுதே, அதிமுக இமாலய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரப்போவது உறுதியாகத் தெரிகிறது.…’’ என்றார்.

இதையடுத்து செய்தியாளர்கள் எஞ்சின் இல்லாத கார் அதிமுக என்று உதயநிதி விமர்சனம் செய்திருக்கிறாரே...? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், எங்கள் கட்சி அட்வான்ஸ்டு ஆகி விட்டது. அவர் இன்னும் அந்தக் காலத்திலேயே, அதாவது நீராவி எஞ்சின், கரி எஞ்சின் காலத்திலேயே இருக்கிறார். இப்போது புல்லட் ரயில் வந்து விட்டது. இன்னும் கூட்ஸ் ரயில் காலத்தில் இருக்கிறார். உதயநிதி இன்னும் அப்டேட் ஆகவே இல்லை. இன்று எல்லாமே மின்சார தொழில் நுட்பத்தில் மிகவேகமாக செல்வது போன்று அதிமுக மிக வேகமாகச் செல்கிறது. எங்களை பார்த்து அப்டேட் இல்லை என்று உதயநிதி சொல்வதன் மூலம், அவரே, அவரை கேவலப்படுத்திக்கொள்கிறார்’’ என்றார்.

அதிமுக கூட்டணியில் பாஜக இந்த முறை 60 தொகுதிகளுக்கு மேல் கேட்பதாகக் கூறப்படுகிறதே...? அதிமுக கூடுதலாகக் கொடுக்குமா...? என்ற கேள்விக்கு, ‘‘எல்லா கட்சியும் கூடுதல் தொகுதிகளை கேட்கத்தான் செய்வார்கள். அதில் எந்த தப்பும் இல்லை. ஆனால், யாருக்கு என்ன பலம் என்று எங்கள் கட்சி முடிவு செய்யும். இதில் நான் எதுவும் சொல்ல முடியாது.

25 ஆண்டுகளாக ராயபுரத்தில் தான் போட்டியிடுகிறேன். 1991-ல் அம்மா, ஒரு திருமண நிகழ்வில், ‘நான் புத்திசாதூரியம் உள்ள ஒரு இளைஞனை தேர்வு செய்ததில் மகிழ்ச்சி’ என்று சொன்னார்கள். அதற்கு அங்கீகாரம் கொடுத்தது ராயபுரம் தொகுதி மக்கள். 25 ஆண்டுகள் வெற்றியைக் கொடுத்தவர்கள். களத்தில் ஒரு மாவீரனுக்கு, விளையாட்டு வீரனுக்கு, வெற்றி தோல்வி பற்றி கவலை இல்லை. ஆனால் ராயபுரத்தில் எனக்கு இந்த முறை வெற்றி தான் முழுமையாக கிடைக்கும். ஜெயக்குமார் அந்த தொகுதிக்கு போகிறார், இந்த தொகுதிக்கு போகிறார் என்று சொல்லப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன்.

மயிலாப்பூர் தொகுதிக்கு போவதாகச் சொல்கிறார்கள். அதெல்லாம் ஒரு ஊரும் கிடையாது. எனக்கு எப்போது ஓரே ஊர் தான். அது ராயபுரம் தான். ராயபுரம் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். எவ்வளவு கஷ்டம் அவர்கள் அனுபவித்து இருக்கிறார்கள் என தெரியும். நான் எம்எல்ஏவாக இருக்கும் போது எப்படி இருந்தது என ஒப்பிட்டு பார்ப்பார்கள். கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். ராயபுரம் தொகுதி மக்களை விட்டு எந்த காலத்திலும் நான் விலகிச்செல்ல மாட்டேன்... கட்சி கட்டளையிடும் வரை...

கட்சியில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடுவதாகச் சொல்வது எல்லாம், கொள்கை சார்ந்த விஷயம். நான் முடிவு செய்ய முடியாத விஷயம். யார் யாரை சேர்க்க வேண்டும். யார் யாரை நீக்க வேண்டும் என்பது கட்சியும் பொதுச்செயலாளரும் முடிவு செய்யும் விஷயம். இதில் நான் இப்போதைக்கு எந்த கருத்தும் சொல்ல முடியாது.

முன்கூட்டியே அதிமுக விருப்பமனு வாங்குவதாக அமைச்சர் ரகுபதி கூறுகிறார். முன்கூட்டியே வாங்கினால் என்ன, பின்கூட்டி வாங்கினால் என்ன ? அவர்கள் ஆமையாக இருக்கலாம். ஆனால், நாங்கள் குதிரையாக இருப்போம். அதிமுக பற்றி அவருக்கு என்ன கவலை. அவர்தான் கரை வேட்டியே மாற்ற விட்டு சென்று விட்டார். புரட்சித்தலைவி ஜெயலலிதா இருந்தபோது ரகுபதி எப்படி பேசினார் என்பது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. ஊரில் யார் குழந்தை பெற்றாலும் பெண் குழந்தையாக இருந்தால் உங்கள் பெயரை தான் வைப்பேன் என்று ஜெயலலிதாவிடம் சொல்லிவிட்டுச் சென்றவர்தான் ரகுபதி. இன்று ஸ்டாலினை வழிநடத்துபவர்கள் எல்லோருமே அண்ணா திமுகவிலிருந்து சென்றவர்கள் தான்.

கொஞ்சம்கூட வாய் கூசாமல், ஸ்டாலினுக்கு பல்லக்கு தூக்கும், அதேபோல் எலியாக இருக்கிற உதயநிதிக்கு கூட பல்லக்கு தூக்கும், இதை விட ஒரு கேடுகெட்ட, மானங்கெட்ட, பணத்திற்காக, பதவிக்காக இப்படி பேசுவதைவிட வேறு அவமானம் உலகத்திலேயே இருக்க முடியாது. கேடு கெட்டவர்கள் கட்சி மாறியவர்கள், அதிமுகவில் இருந்து திமுகவிற்கு சென்று வேட்டி மாற்றிய ரகுபதிக்கு, எங்கள் இயக்கத்தை பற்றி சொல்வதற்கு எந்த தகுதியும் இல்லை’’ எனத் தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ரத்து..! எம்.பி.க்களிடம் வழங்கப்பட்ட புதிய திட்டதின் வரைவு மசோதா நகல்..!
பெரியார் 8 பதவிகளை ராஜினாமா செய்தவர்..! இவர்கள் பதவிக்காகவே உயிர் வாழ்பவர்கள்.. நாஞ்சில் சம்பத் கிண்டல் பேச்சு