நேற்று சேலம் இன்று கோவை... திமுகவில் அதிரடி சரவெடி...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 4, 2020, 2:59 PM IST
Highlights

சேலம் நாமக்கல் மாவட்ட திமுகவில் நிர்வாகிகள் அதிரடியாக  மாற்றப்பட்ட நிலையில் தற்போது கோவை மாவட்டத்திலும் திமுக சார்பில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .  

சேலம் நாமக்கல் மாவட்ட திமுகவில் நிர்வாகிகள் அதிரடியாக  மாற்றப்பட்ட நிலையில் தற்போது கோவை மாவட்டத்திலும் திமுக சார்பில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .  சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த வீரபாண்டி ராஜா  திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என நேற்று அறிவிப்பு வெளியானது.  இதுகுறித்து  அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,  இது நாள் வரையில் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்து வந்த வீரபாண்டி ஆர்.  ராஜா அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு ,   அவருக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.   அதாவது திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக வீரபாண்டி  ஆ. ராஜா நியமிக்கப்பட்டுள்ளார் . 

அதேபோல் வீரபாண்டி ராஜாவுக்கு பதில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக எஸ். ஆர் சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.   அதேபோல்  சேலம்மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக டி.எம் செல்வகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார் .  அதேபோல் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த காந்திசெல்வன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கே.ஆர். என் ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார் .  இந்நிலையில் கோவை மாநகரமும்  மாவட்டம் நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கப்படுகிறது  என திமுக அதிரடியாக அறிவித்துள்ளது .   இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம் :- இதுநாள்வரை  57 வார்டு களுடன் செயல்பட்டு வரும் தற்போதைய கோவை மாநகர் மாவட்டத்தில் மேலும் 14 வார்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டு 71 வார்டுகள் கொண்ட கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் அமையும்  எனவும் அதில் கோவை தெற்கு தொகுதி 19 வார்டுகள் சிங்காநல்லூர் தொகுதி 19-வார்டு கோவை வடக்கு தொகுதி 19 வார்டுகள்,  தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட ஆர்எஸ் புரம் பகுதி கழகம் 7-வார்டு குனியமுத்தூர் பகுதி கலகம் 7-வார்டு ஆகிய 71 வார்டுகள் கொண்டதாக புதிய கோவை மாநகர் தெற்கு மாவட்டம் அமைவதோடு அதன் பொறுப்பாளராக திரு நா. கார்த்திக் எம்எல்ஏ அவர்கள் தொடர்ந்து செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் புதிதாக பிரிக்கப்பட்ட கோவை மாநகர் மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக மு. முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார் கவுண்டம்பாளையம் பகுதி-11 வார்டுகள் சரவணம்பட்டி பகுதி 11 வார்டுகள்,  குறிச்சி பகுதி 7 வார்டுகள் ஆகிய 29 வாரத்தில் கொண்டதாக கோவை மாநகர் மேற்கு மாவட்டம் அமைவதோடு இம்மாவட்டத்தின் கழக பொறுப்பாளராக மு. முத்துசாமி அவர்கள் நியமிக்கப்படுகிறார் என அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 
அதேபோல் கோவை வடக்கு தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட தொகுதிகள் அடங்கிய ஒன்றிய நகரங்கள் விவரம் குறித்தும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது ,   அதாவது ஏற்கனவே செயல்பட்டு வரும் கோவை வடக்கு மாவட்டம்  மேட்டுப்பாளையம்  தொகுதியில் உள்ள மேட்டுப்பாளையம் நகரம்,  காரமடை கிழக்கு,  காரமடை  மேற்கும் ,  அதேபோல் கவுண்டம்பாளையம் தொகுதியில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம்,  சர்க்கார்  சாமகுளம் ஒன்றியம் ,  தொண்டாமுத்தூர் ஒன்றியம் ,  ஆகிய ஒன்றிய  நகர  கழகங்கள் கொண்டதாகவும் கோவை வடக்கு  மாவட்ட  கழகம் இருக்கும் எனவும் அதின்  செயலாளராக, சி. ராமச்சந்திரன் தொடர்ந்து செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

அதேபோல் ஏற்கனவே செயல்பட்டு வரும் கோவை தெற்கு மாவட்டம் தொகுதிக்குட்பட்ட ,   வால்பாறை நகரம் ,  ஆனைமலை ஒன்றியம் ,  பொள்ளாச்சி நகரம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் ,  கிணத்துக்கடவு கிழக்கு  ஒன்றியம் ,  கிணத்துக்கடவு மேற்கு (பாதி) மற்றும் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியம் (பாதி) மதுக்கரை ஒன்றியம் ,  சூலூர் வடக்கு ஒன்றியம் ,  சூலூர் தெற்கு ஒன்றியம், சுல்தான்பேட்டை ஒன்றியம், ஆகிய நகர ஒன்றிய கழகங்கள் கொண்டதாக கோவை தெற்கு மாவட்டம் இருக்கும் என்றும் ,  அதன் பொறுப்பாளராக தென்றல் செல்வராஜ் தொடர்ந்து செயல்படுவார் என்றும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது .
 

click me!