Latest Videos

'குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000..' கையில் எடுத்த அதிமுக - பாஜக.. திணறும் திமுக !!

By Raghupati RFirst Published Feb 15, 2022, 11:49 AM IST
Highlights

திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

ஆனால் இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. பொருளாதார ரீதியாக அரசுக்கு இருக்கும் சில சிக்கலால் இந்த திட்டம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. இந்த உரிமைத் தொகை ஏழ்மையான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்றும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

மக்களுக்கு கண்டிப்பாக மாத 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும். இதில் மாற்றம் இருக்காது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதோடு திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினும் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் இந்த வாக்குறுதியை அளித்தார். இந்நிலையில், பல ஊர்களில் திமுகவினர்  ‘தமிழக அரசின் ஏழை குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய் உதவித் தொகைக்கான விண்ணப்பம்' என்ற பெயரில், விண்ணப்பப் படிவம் தயாரித்துள்ளனர். 

அதை பெண்களிடம் வினியோகம் செய்வதாகவும், ரேஷன் கடை ஊழியர்களிடம் கொடுத்து, ரேஷன் கார்டுதாரர்களிடம் வழங்கும்படி கூறியதாகவும் தகவல் வெளியானது. இந்த படிவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், போலியாக விண்ணப்பம் தயாரித்து வினியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

வாக்காளர்களிடம் சென்று, இந்த படிவத்தை காட்டி, 'முதல்வர் திட்டத்துக்கு எழுதி போட்டால்தான் பணம் வரும்' என்று சொல்லி வாக்காளர்களின் விவரங்களை வாங்குவதோடு, அவர்களுக்கு பொய்யான தகவலை தெரிவித்து வாக்குகளை வாங்க முயற்சி செய்கின்றனர் என்றும் குற்றசாட்டுகள் எழுந்து இருக்கிறது. 'முறைகேட்டை தடுக்க வேண்டும். போலி விண்ணப்ப வினியோகம் செய்வோரை கைது செய்ய வேண்டும். மோசடியை தடுக்க வேண்டும்.

எனவே குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை விண்ணப்பம் வினியோகிக்கப்படுவது அரசுக்கு தெரியுமா? அவை உண்மையா, போலியா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்' என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

மோசடியாக வினியோகிப்பவர்களை கைது செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 தருவோம் என்று சொல்லி வெற்றி பெற்ற திமுக அரசு, மக்களை ஏமாற்றி வருகிறது என்றுஅதிமுக, பாஜக மற்றும் பிற கட்சிகளை சேர்ந்தவர்கள்  இதை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த சம்பவம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களத்தில் சூட்டை கிளப்பியிருக்கிறது. 

click me!