தெறிக்கவிடும் பாஜக பெண் வேட்பாளர்.. திமுகதான் எங்கள் எதிரி.

By Ezhilarasan Babu  |  First Published Feb 15, 2022, 11:09 AM IST

ஆனால் அதெல்லாம் பொய். பாஜக வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் மக்கள் அமோக வரவேற்பு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள், நான் பாஜகவில் சேர்ந்த வெறும் இரண்டு ஆண்டுகளில் என்னை வேட்பாளராக அறிமுகம் செய்திருக்கிறார்கள். ஆனால் மற்ற கட்சியில் இதற்கு சாத்தியமே இல்லை. 27 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை கொண்ட 92 வது வார்டில் நான் போட்டியிடுகிறேன்.


தமிழகத்தில்  மாற்றம் தேவை என மக்கள் எதிர்பார்க்கிறார்கள், அதனால் பாஜகவுக்கு அமோக வரவேற்பு உருவாகியிருக்கிறது என சென்னை 92 ஆவது வார்டு பாஜக பெண் வேட்பாளர்களை கலைதேவி கூறியுள்ளார். பாஜக வளராது என்ற மாயையை திமுக போன்ற கட்சிகள் உருவாக்கி வைத்துள்ளன, தற்போது அது உடைக்கப்பட்டிருக்கிறது என்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தான் தங்கள் எதிரி என்றும் மேலும் அவர் கூறியுள்ளார். அவரின் இந்த பேட்டியை பாஜகவினர் சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றனர். 

திமுக எதிர்க்கட்சியாக இருந்தது முதலே அதிமுகவுக்கும் பாஜகவுக்குமான மோதல் இருந்து வருகிறது. இரண்டு கட்சிகளுக்குமான மோதல் அரசியல் நோக்கத்திற்கானது என்பதையும் தாண்டி சித்தாந்த ரீதியான பகை என்றே கூறலாம். தற்போது திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ள நிலையில், அந்த மோதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது.  திமுக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது அப்படி வந்தால் தமிழகத்தில் பாஜக  சித்தாந்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் காலூன்ற பெரும் தடை ஏற்பட்டுவிடும் என்பதால் திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் எதிரான பிரச்சாரத்தை பாஜக வலுவாக முன்னெடுத்தது. ஆனால் எதிர்பார்த்ததை காட்டிலும் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. இதனால் முன்பை காட்டிலும் தற்போது திமுகவை பாஜக வலுவாக எதிர்க்க ஆரம்பித்துள்ளது. திராவிட கட்சிகளை அழிப்பதே தங்களின் நோக்கம் என களத்தில் நின்று வரும் பாஜக அதிமுக என்று திராவிட கட்சியுடன் கைகோர்த்துக்கொண்டு திராவிட சித்தாந்தத்தில் உறுதியாக நிற்கும் திமுகவை மூர்க்கமாக எதிர்த்து வருகிறது.

Latest Videos

undefined

அதிலும் குறிப்பாக  ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜக தலைவராக பொறுப்பேற்றது முதல் இரு கட்சிகளுக்கும் இடையேயான கருத்து மோதல் அதிகரித்திருக்கிறது என்றே சொல்லலாம். மற்ற பாஜக தலைவர்களை காட்டிலும் அண்ணாமலைக்கு பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்திருப்பதே இதற்கு காரணம் என்றும் கூறலாம். பல ஆண்டுகளாக தமிழகத்தில் காலூன்ற பாஜக போராடி வரும் நிலையில் இதுவரை வெறும் 4 சட்டமன்ற உறுப்பினர்களையே அக்கட்சியால் பெற  முடிந்துள்ளது. ஒருபுறம் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது தேர்தலை சந்தித்து வரும் நிலையில், மறுபுறம் திமுக விஸ்வரூப வெற்றிகளை பெற்றுவருகிறது. அதிமுகவும், பாஜகவும் வரும் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும் இரு கட்சிகளும்  திமுகவுக்கு எதிராகவே தங்களது பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றன. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக, மாதம் குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்து ஏமாற்றிய திமுக, ஆட்சிக்கு வந்தவுடன்  நீட் தேர்விலிருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி ஓட்டு வாக்கி ஏமாற்றிய திமுக என்றெல்லாம் விமர்சித்து வருகின்றன. 

எனவே  உரலுக்கு ஒரு பக்கம் தான் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பதுபோல அதிமுக-பாஜக என்ற இருமுனை தாக்குதல்களை திமுக எதிர்கொண்டு வருகிறது. எதிர்க்கட்சிகளின் இந்த பிரச்சாரம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பிரச்சாரங்களை முறியடிக்க முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளையும் வியூகங்களையும் முன்னெடுத்து வருகிறார். சட்டமன்றத் தேர்தலிலேயே கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை மீண்டும் அந்த கட்சிக்கு வாக்களித்து ஏமாற போகிறீர்களா? நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் ரவுடிசம், கட்டப்பஞ்சாயத்து, வசூல் வேட்டை அதிகரிக்கும் என்றும், அதிமுக பாஜகவினரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுக அதிமுக வேட்பாளர்களுக்கு இணையாக பாஜகவின் வேட்பாளர்களும் அதிக கவனம் பெற்று வருகின்றனர். 

இந்த வகையில் சென்னை 92 வது வார்டு பாஜக வேட்பாளராக போட்டியிடும் கலை தேவி அப்பகுதியில் அதிமுக-பாஜக வேட்பாளர்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு மக்களின் செல்வாக்கை பெற்று வருகிறார். அவரின் செயல்பாடுகள் திமுகவினரை கலக்கமடைய வைத்துள்ளது. இந்நிலையில் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள கலைதேவி, தமிழகத்தில் பாஜக வளர முடியாது காலூன்ற முடியாது என கூறி வந்த நிலையில் மக்கள் மாற்றத்தை எதிர்பார்ப்பதால் அவர்கள் பாஜகவை ஆதரிக்கும் சூழல் உருவாகி இருக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசியிருப்பதாவது:-  பாஜகவுக்கு எதிராக எதிர்ப்பு மனநிலை இருக்கிறது என்ற பொய் பிரச்சாரம் இனி எடுபடாது. அப்படிக் கூறுபவர்கள் எங்களுடன் களத்திற்கு வந்து பாருங்கள் பாஜகவை மக்கள் எவ்வளவு ஆதரிக்கிறார்கள் என்பதை நாங்கள் காட்டுகிறோம். தமிழக அரசியலில் மாற்றம் தேவை என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள், திமுக போன்ற கட்சிகள் தமிழகத்தில் பாஜக வளராது என்ற மாயையை உருவாக்கி வைத்திருக்ககின்றன. பாஜக வளராது என்றும், பாஜக ஓட்டு கேட்டு சென்றால் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று கூறி வருகின்றனர். 

ஆனால் அதெல்லாம் பொய். பாஜக வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் மக்கள் அமோக வரவேற்பு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள், நான் பாஜகவில் சேர்ந்த வெறும் இரண்டு ஆண்டுகளில் என்னை வேட்பாளராக அறிமுகம் செய்திருக்கிறார்கள். ஆனால் மற்ற கட்சியில் இதற்கு சாத்தியமே இல்லை. 27 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை கொண்ட 92 வது வார்டில் நான் போட்டியிடுகிறேன். இதே திமுகவில் என்னைப் போன்றவர்களால் சீட்டு வாங்க முடிந்திருக்குமா என்று நீங்களே எண்ணிப் பாருங்கள். மக்களோடு மக்களாக, தோழியாக, சகோதரியாக, தங்கையாக வார்டு மக்களுக்கு பல நிவாரண உதவிகளை செய்திருக்கிறேன். தெரு விளக்கை சரி செய்து கொடுத்திருக்கிறேன். ஐந்து லட்ச ரூபாய் மருத்துவ காப்பீடு பெற்றுத் தந்திருக்கிறேன். அமைப்புசாரா நல வாரியத்தில் உறுப்பினராக இணைத்திருக்கிறேன். என்னைப்பொறுத்தவரையில் பாஜகவுக்கு நேரடி போட்டி என்பது திமுக மட்டும்தான். ஒரு ஓட்டு பாஜக என்று கூறினார்கள் ஆனால் ஒரு ஓட்டு கூட வாங்காமல் கமுதியில் இன்று பாஜக மலர்ந்திருக்கிறது.

மக்களிடம் நாங்கள் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான், ஊழல் இல்லாத ஆட்சி வேண்டும், மக்களுக்கு கைகொடுக்கிற தலைவர்கள் வேண்டும், மாமன்ற உறுப்பினர் என்றால் கார் வாங்கிக் கொண்டு அதில் கொடிக்கட்டி பந்தாவாக ஊர் சுற்றுபவராக மட்டும் இருக்கக்கூடாது மக்களுக்கு பிரச்சினை என்றால் ஓடோடி சென்று அவர்களுடன் நிற்பவராக இருக்க வேண்டும். நான் அப்படித்தான் இதுவரை நின்றிருக்கிறேன். இனியும் நிற்பேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

click me!