நீர்நிலையில் ஆக்கிரமித்து கட்டிய போலீஸ் ஸ்டேஷனை காப்பாற்ற ஆவணங்களை தேடும் திமுக அரசு.. அறப்போர் இயக்கம்!

By vinoth kumar  |  First Published Jan 6, 2024, 2:03 PM IST

அரசாங்கமே கட்டிடத்தை இடிக்க போகிறதா அல்லது நீதிமன்றம் இடிக்க உத்தரவிட வேண்டுமா என்று எச்சரிக்கையும் கொடுத்துள்ளது. 


அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட நீர்நிலை ஆக்கிரமிப்பை திமுக ஆட்சி நியாயப்படுத்த கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது என அறப்போர் இயக்கம் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்;- சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளில் மக்கள் பட்ட துயரங்களை பார்த்த பிறகும் ஒரு நீர்நிலையை ஆக்கிரமிக்க திமுக அரசு இவ்வாறு நீதிமன்றத்தில் கதைகள் சொல்லிக் கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதுவும் இரண்டு வருடங்களாக இல்லாத ஒரு ஆவணத்தை தேடிக் கொண்டு இருக்கிறார்கள். அல்லது நீர்நிலையை ஆக்கிரமிக்க இவர்களே ஒரு போலி ஆவணத்தை உருவாக்க திட்டம் போட்டு வேலை செய்கிறார்களா தெரியவில்லை. 

Latest Videos

இதையும் படிங்க;- 33 மாதங்களுக்கு முன்னாடி சொன்னீங்களே.. என்ன ஆச்சு.. ஆளுங்கட்சியை திக்குமுக்காட செய்யும் நாராயணன் திருப்பதி.!

அறப்போர் தொடுத்த இந்த வழக்கில், நீதிமன்ற விசாரணையில், IIT ஆய்வுக்குழு அறிக்கையின் அடிப்படையில் இந்த கட்டிடம் நீர்நிலையில் தான் கட்டப்பட்டுள்ளது என்று உறுதி செய்யப்பட்டு விட்டது. அரசாங்கமே கட்டிடத்தை இடிக்க போகிறதா அல்லது நீதிமன்றம் இடிக்க உத்தரவிட வேண்டுமா என்று எச்சரிக்கையும் கொடுத்துள்ளது. 

இதையும் மீறி வருடக்கணக்கில் இந்த வழக்கை இழுத்து அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட நீர்நிலை ஆக்கிரமிப்பை திமுக ஆட்சி நியாயப்படுத்த கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. தவறான விஷயங்கள் செய்வதில் திமுக அதிமுக கூட்டணி மிகவும் அருமையாக இணைந்து வேலை செய்கிறது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் அரசாங்கம் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டிய இந்த காவல்நிலையத்தை இடித்து தரை மட்டமாக்க வேண்டும். 

இதையும் படிங்க;-  சாராய ஆலைகள் நடத்தும் திமுகவினருக்கு வருமானம் வந்தால் போதும் என்ற மனப்பான்மையில் திமுக அரசு- விளாசும் அண்ணாமலை

நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் மற்றவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமைய வேண்டும். எப்படியாவது கட்டிடத்தை கட்டி முடித்து விட்டால் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்திக் கொள்ளலாம் என்ற திருட்டு மனநிலை ஒழிக்கப்பட வேண்டும் என்றால் இந்த கட்டிடம் இடிக்கப்பட்டே ஆக வேண்டும் என அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. 

click me!