திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு.. ஸ்டாலின் அறிவிப்பு..!

Published : Sep 09, 2020, 10:42 AM IST
திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு.. ஸ்டாலின் அறிவிப்பு..!

சுருக்கம்

திமுகவின் 4வது பொதுச்செயலாளராக போட்டியின்றி துரைமுருகன் ஒருமனதான தேர்வு செய்யப்பட்டுள்ளார். காணொலி வழியாக நடைபெறும் திமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

திமுகவின் 4வது பொதுச்செயலாளராக போட்டியின்றி துரைமுருகன் ஒருமனதான தேர்வு செய்யப்பட்டுள்ளார். காணொலி வழியாக நடைபெறும் திமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 29-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்ட திமுக பொதுக்குழு கூட்டம் காணொலிக் காட்சி மூலம் இன்று காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்பட 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் 67 இடங்களில் இருந்து திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் சுமார் 3,500 பேர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும் பொருளாளர் பதவிக்கு நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் இருவரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதனையடுத்து, திமுகவின் 4வது பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல், திமுகவின் 8வது பொருளாளராக டி.ஆர்.பாலு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

எடப்பாடி பழனிசாமிக்கு மொத்த அதிகாரத்தையும் தூக்கி கொடுத்த பொதுக்குழு உறுப்பினர்கள்.. இபிஎஸ் எடுப்பது தான் முடிவு..!
அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் தள்ளு முள்ளு.. நிகழ்ச்சி அரங்கில் பரபரப்பான சூழல்..