திமுகவில் உருவாகும் புதிய பதவி... அக்டோபர் 6-ம் தேதி பொதுக்குழுவில் அதிரடி..!

By vinoth kumarFirst Published Sep 19, 2019, 1:19 PM IST
Highlights

முதல் முறையாக மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 6-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

முதல் முறையாக மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 6-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய சாரா அம்சமாக பார்க்கும் போது 3 விஷயங்களை அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், திமுக கட்சியின் ஆக்கப்பணிகள், கழகச் சட்டதிட்ட திருத்தம், தணிக்கை குழுவின் அறிக்கை சமர்பிப்பது உள்ளிட்டவைகளுக்காக பொதுக்குழு கூட்டம் 
கூடுகிறது. 

இந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷங்களை முடிவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது மட்டுமின்றி, மாநில முழுவதும் திமுக வலுப்படுத்துவது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், உள்ளாட்சித்தேர்தல் வர உள்ளதால் கட்சியின் வளர்ச்சியை நகரங்கள் முதல் கிராமங்கள் வலுப்படுத்த தேவை இருப்பதாக திமுக தலைமை கருதுகிறது. 

திமுக முக்கிய சில பொறுப்புகள் புதிதாக உருவாக்கப்பட உள்ளதாக திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக தற்போது பொதுச்செயலாளராக உள்ள அன்பழகன் அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், இணைபொதுச்செயலாளர் என்ற புதிய பதவியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின்னர், கடந்த வருடம் ஆகஸ்ட் 28-ம் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது, பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக ஓராண்டு பின்னர் மீ்ண்டும் திமுக பொதுக்குழு கூட்டம் என்பது முதல் முறையாக மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. 

click me!