
கூவத்தூர் பணப்பட்டுவாடா குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஸ்டாலின் தரப்பில் திமுக மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
டைம்ஸ் நவ் - மூன் டிவி இணைந்து நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூவத்தூர் சொகுசு விடுதியில் சசிகலா எம்.எல்.ஏக்களுக்கு பணமும், தங்க கட்டிகள் கொடுக்கப்பட்டதாக வெளியான வீடியோ ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கியது.
மேலும், சசிகலா தரப்பு மூன்று எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு விட்டது எனவும், சிலருக்கு இன்னும் கொடுக்கப்படவில்லை எனவும் சரவணன் தெரிவித்தார்.
இதில் பதிவான சரவணன் பேசிய காட்சி நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆனால் அதற்கு சம்பந்தபட்ட எம்.எல்.ஏக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தான் அவ்வாறு பேசவில்லை என்றும், என்னை போல் யாரோ பேசி என்னை மாட்டிவிடுகிறார்கள் எனவும் சரவணன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கூவத்தூர் பணப்பட்டுவாடா குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஸ்டாலின் தரப்பில் திமுக மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
அதற்கு ஜூன் 16 ஆம் தேதிக்குள் தகுந்த ஆதாரங்களுடன் மனுவாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.