
தினகரனின் செயல்பாடுகள் பிடிக்காமல் அதிமுகவில் இருந்து ஒதுங்கியிருந்த நெல்லை கருப்பசாமி பாண்டியன் இன்னும் ஓரிரு நாளில் மு.க.ஸ்டாலினை சந்தித்து மீண்டும் திமுகவில் இணைகிறார்.
திமுகவில் இருந்து ஓரங்கட்டப்படிருந்த கருப்பசாமி பாண்டியன் கடந்த ஆண்டு ஜெயலலிதா முன்பாக திமுவிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பொது செயலாளராக பதவியேற்றுக் கொண்ட சசிகலா, அதிருப்தியாளர்களை கண்டறிந்து அவர்களை சரிகட்டினார்.
தீபாவுக்கு ஆதரவளித்த சைதை துரைசாமி, முதல் கே.பி. முனுசாமியுடன் இருந்த கோ.சமரசம், தினகரனுக்கு எதிராக பேசி வந்த கருப்பு பாண்டியன் உள்ளிட்ட 13 பேரை அதிமுகவின் உயரிய பொறுப்பான அமைப்பு செயலாளர் பதவி கொடுத்து தன் பக்கம் கொண்டு வந்தார்.
இதையடுத்த சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை சென்ற பிறகு டிடிவி தினகரன் துணை பொது செயலாளராகவும் ஆக்கபட்டார். ஏற்கனவே டிடிவியால் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு பல துன்பங்களை அடைந்து திமுகவுக்கு சென்றவர்தான் இந்த கருப்பசாமி பாண்டியன்.
தற்போது மீண்டும் அவர் தலைமையின் கீழ் வேலை செய்யவேண்டும் என்பதை எண்ணி மனம் நொந்து போன அவர், அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி அமைப்பு செயலாளர் பதவியிலிருந்து ராஜினமா செய்தார்.
இந்நிலையில் கருப்பசாமி பாண்டியன் இன்னும் ஓரிரு நாளில் அதிமுகவிலிருந்து விலகி மீண்டும் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.