அதிமுக அமைச்சர்களுடன் தொடர்பில் திமுக நிர்வாகிகள்... உடன்பிறப்புகளை கலங்கடிக்கும் வி.பி.துரைசாமி..!

By Thiraviaraj RMFirst Published May 23, 2020, 4:15 PM IST
Highlights

திமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி அங்கிருந்து விலகி நேற்று பஜகவில் இணைந்த நிலையில் திமுகவில் இருந்து பலரும் அதிமுக- பாஜக கட்சிக்கு தாவ உள்ளதாக கூறப்படுகிறது. 
 

திமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி அங்கிருந்து விலகி நேற்று பஜகவில் இணைந்த நிலையில் திமுகவில் இருந்து பலரும் அதிமுக- பாஜக கட்சிக்கு தாவ உள்ளதாக கூறப்படுகிறது. 

திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஒருவரே பாஜகவில் இணைந்து உள்ளது திமுக தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வி.பி.துரைசாமியை அடுத்து சிலர், அதிமுக மற்றும் பாஜகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வி.பி.துரைசாமி அளித்த பேட்டியில் 'திமுக எம்.எல்.ஏ.,க்கள் பலர் அவர்கள் சமுதாயம் சார்ந்த அதிமுக அமைச்சர்களிடம் இன்னும் தொடர்பில் இருக்கின்றார்கள் என்று கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் திமுகவில் இருந்து பலர் வெளியேறி அதிமுக மற்றும் பாஜகவிற்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அவ்வாறு நடந்தால் அது திமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் திமுக ஆட்சியில் இல்லாத நிலையில் வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது. இந்த நிலையில் திமுகவில் இருந்து முக்கிய தலைவர்கள் வெளியேறினால் அது திமுகவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து கூறி வருகின்றனர். 

அதேபோல் 15 ஆண்டுகள் திமுக முதல்வர் பதவியை பிடிக்க இயலாத நிலை ஏற்படும் என்றும் கூறியுள்ளார். அதாவது கடந்த இரு ஆட்சிகளாக தொடர்ந்து திமுக ஆட்சியமைக்க முடியாத நிலையில் இருந்தது. அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கும் திமுக ஆட்சியை பிடிக்க முடியாத நிலை உருவாகும் என கூறியுள்ளதும் திமுக வட்டாரத்தை கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது. 

click me!