திமுக நிர்வாகிகள் மாற்றம்! ஸ்டாலின் அதிரடி

First Published Jul 1, 2018, 4:04 PM IST
Highlights
DMK executives change - The DMK leadership announced


திமுக கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மாவட்ட வாரியாக நடைபெற்ற கள ஆய்வுப் பணிக்குப் பின் பல மாவட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர்

மதுரை மாநகர் மாவட்டம், பழங்காநத்தம் பகுதி கழக செயலாளர் எம்.ஒச்சுபாலு அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அ.க.தவணியை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நெல்பேட்டை பகுதி 52-வது வட்ட கழக செயலாளர் டி.பாலா (எ) பாலசுப்பிரமணியன், அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஆர்.ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை வடக்கு மாவட்டம் மேலூர் ஒன்றியக் கழக செயலாளர் வ.ரகுபதி நீக்கப்பட்டு அந்த பொறுப்புக்கு ஆர்.குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். கொட்டாம்பட்டி ஒன்றிய கழக செயலாளர் துரை.புகழேந்தி, அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு எஸ்.கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை தெற்கு மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றிய கழக செயலாளர் கே.உக்கிரபாண்டி நீக்கப்பட்டு சி.சுதாகரன் செல்லம்பட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

தேனி, பெரிய குளம் ஒன்றிய கழக செயலாளர் எல்.போஸ் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு எல்.எம்.பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். கம்பம் நகர கழக செயலாளர் சிங்.செல்லபாண்டியன் விடுவிக்கப்பட்டு டி.துரை நெப்போலியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ம.சக்தி (எ) சத்தியநாதன் விடுவிக்கப்பட்டு, ஆர்.எம்.கென்னடி நியமிக்கப்பட்டுள்ளார். இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வி.சி.கனகராஜன் விடுவிக்கப்பட்டு, ஜீவானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரம் ஒன்றிய கழக செயலாளர் கோ.கேசவன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு வி.எஸ்.ஆர்.ஜெகதீசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேரன்மா தேவி ஒன்றிய செயலாளர் டி.ஆறுமுகம் நீக்கப்பட்டு முத்துப்பாண்டியும்ய, நாங்குநேரி ஒன்றிய கழக செயலாளர் என் வானுமாமலை நீக்கப்பட்டு ஆர்.எஸ்.சுடலைக்கண்ணுவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மேற்கு மாவட்டம், குருவிகுளம் வடக்கு ஒனிறிய கழக செயலாளர் செ.சேர்மதுரை அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு
ஆர்.கிறிஸ்டோபரும், மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர் அ.இராஜா நீக்கப்பட்டு டி.விஜயகுமாரும், ஆலங்குளம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர்
எஸ்.சூட்டுசாமி நீக்கப்பட்டு எம்.அன்பழகனும், சங்கரன்கோவில் நகர செயலாளர் எஸ்.சங்கரன் நீக்கப்பட்டு ஆர்.ராஜதுரை நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல்
திருநெல்வேலி மத்திய மாவட்டம் மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.அருள்மணி நீக்கப்பட்டு பி.அன்பழகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திக்குளம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆ.வேலாயுதபெருமாள் நீக்கப்பட்டு ஏ.சி.ஜெயக்குமாரும், கயத்தாறு மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அ.சுப்பிரமணியன் நீக்கப்பட்டு கே.கருப்பசாமியும், தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருவைகுண்டம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சி.வைகுண்டம் நீக்கப்பட்டு எஸ்.கொம்மையா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், குளச்சல் நகர செயலாளர் அ.நசீர் நீக்கப்பட்டு எம்.அப்துல் ரஹீம், திருவட்டார் ஒன்றிய கழக செயலாளர் பே.ராஜேந்திரன்
நீக்கப்பட்டு சி.ஜான்பிரைட் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயக்குமார் நீக்கப்பட்டார். அவருக்கு பதில் கம்பம் ராமக்கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட செயலர்
திவாகரன் நீக்கப்பட்டு, அவருக்கு பதில் கே. முத்துராமலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை வடக்கு, தெற்கு என செயல்பட்டு வந்த 2 மாவட்டங்கள் ஒரே மாவட்டமாக மதுரை மாநகர் மாவட்டமாக மாற்றப்பட்டு அதன் பொறுப்பாளராக முன்னாள் எம்எல்ஏ கோ.தளபதி நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்பு குழு உறுப்பினராக 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

click me!