கூட்டணி கட்சிகளுக்கு ரூ.40 கோடி டொனேசன்... மலைக்க வைத்த ஸ்டாலின்... நோட்டமிடும் தேர்தல் ஆணையம்..!

By Selva KathirFirst Published Sep 25, 2019, 10:53 AM IST
Highlights

இடதுசாரிகள் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கு தேர்தல் சமயத்தில் திமுக கொடுத்த ரூ.40 கோடி டொனேசன் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இடதுசாரிகள் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கு தேர்தல் சமயத்தில் திமுக கொடுத்த ரூ.40 கோடி டொனேசன் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் தேர்தல் செலவுகளை திமுக தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்துள்ளது. அதில் சுமார் 79 கோடி திமுக தேர்தல் சமயத்தில் செலவழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்ன என்றால் கூட்டணி கட்சியான இந்திய கம்யுனிஸ்ட் கட்சிக்கு 15 கோடி ரூபாயும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 கோடி ரூபாயும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 15 கோடி ரூபாயும் திமுக தரப்பில் இருந்து டொனேசனாக கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள திமுகவின் இந்த செலவுக் கணக்கு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.  ஏனென்றால் கூட்டணி கட்சிகளுக்கு திமுக 40 கோடி ரூபாய் டொனேசன் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த 40 கோடி ரூபாயை 4 தவணைகளாக ஆன்லைன் டிரான்சாக்சன் மூலமாக திமுக வெளிப்படையாகவே செய்துள்ளது. இது திமுகவினரையே குழப்பம் அடையச் செய்துள்ளது.

இடதுசாரிக் கட்சிகளுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கவே திமுக தரப்பில் எதிர்ப்பு நிலவியது. ஆனால் அதனையும் மீறி இரண்டு கட்சிகளுக்கு சுமார் 25 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது ஏன், கொங்கு ஈஸ்வரனுக்கு 15 கோடி ரூபாய் கொடுத்தது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து திமுக தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ ஒரு கட்சி மற்ற கட்சியிடம் இருந்து இப்படி பணம் வாங்குவது சாதாரண நிகழ்வு நாங்கள் அதனை திருப்பி கொடுத்துவிடுவோம் என்று கூறியுள்ளது. இதே போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ 25 கோடி ரூபாயை வாங்கி நாங்கள் 2 தொகுதிகளில் மட்டும் செலவழிக்கவில்லை, தமிழகம் முழுவதும் செலவழித்தோம் என்று விளக்கம் அளித்துள்ளது.

ஆனால், இந்த விவகாரத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக அதிமுக மற்றும் பாஜக தரப்பு கிளப்பிவிட்டுள்ளது. மேலும் தேர்தல் ஆணையமும் கூட திமுக கொடுத்த டொனேசனை மூன்று கட்சிகளும் எப்படி செலவழித்துள்ளன என்கிற விளக்கம் கேட்க உள்ளதாக கூறப்படுகிறது. எனவே அடுத்தடுத்த நாட்களில் இந்த 40 கோடி ரூபாயை மையமாக வைத்து தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கும்.

click me!