அதிமுக வேட்பாளருக்கு உதவிய திமுக மாவட்ட செயலாளர்... கழற்றி விட்ட மு.க.ஸ்டாலின்..!

Published : Apr 24, 2019, 05:26 PM IST
அதிமுக வேட்பாளருக்கு உதவிய திமுக மாவட்ட செயலாளர்... கழற்றி விட்ட மு.க.ஸ்டாலின்..!

சுருக்கம்

அதிமுக வேட்பாளருக்கு உதவிய திமுக மாவட்ட செயலாளரை இடைத்தேர்தல் பணிகளில் இருந்து மு.க.ஸ்டாலின்  கழற்றி விட்டதாக கூறப்படுகிறது.

அதிமுக வேட்பாளருக்கு உதவிய திமுக மாவட்ட செயலாளரை இடைத்தேர்தல் பணிகளில் இருந்து மு.க.ஸ்டாலின்  கழற்றி விட்டதாக கூறப்படுகிறது.

திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் சட்டசபை இடைத்தேர்தல் வரும் மே 19ம் தேதி நடைபெற உள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும், திமுகவின் மாவட்டச் செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்கள் என, பலரையும் பொறுப்பாளராக நியமித்திருக்கிறார்கள். ஆனால், இந்தப்பட்டியலில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் வேணுவின் பெயர் இல்லை. காரணம் விசாரித்தால், மக்களவை தேர்தலில், அதிமுக வேட்பாளர் வேணுகோபாலுக்கு, இவர் ரகசியமாக ஒத்தாசை செய்ததாக  காங்கிரஸ்  வேட்பாளர் ஜெயகுமார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் புகார் சொல்லி இருந்தாராம்.

இதனால்தான், அவர் இடைத்தேர்தல் ஆட்டத்தில் கழற்றி விடப்பட்டதாக அறிவாலயம் வட்டாரத்தினர் கூறுகின்றனர். ஆனால், மற்றொரு தரப்போ, உடம்பு சரியில்லாததால் தான், வேணுவை, ஸ்டாலினே ஓய்வு எடுக்கச் சொல்லி விட்டதாக கூறுகிறார்கள். உண்மை என்ன என்பது தெரியாமல் சிலர் தவித்து வருகிறார்கள். 

PREV
click me!

Recommended Stories

சீமான் பேச்சை காப்பியடித்தாரா விஜய்?.. ஆதாரங்களை அடுக்கும் 'தம்பிகள்'.. இணையத்தில் மோதல்!
என் வாழ்நாளில் இதுவரை இல்லாத மகிழ்ச்சி..! தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சி பதிவு!