ஸ்டாலினை விடவாய்யா நீ ஓவரா உழைச்சுட்ட..? டூர் போயிருக்குற..? குண்டுவெடிப்பில் தப்பிய நிர்வாகியை பெண்டு கழட்டும் அறிவாலயம்..!

By Vishnu PriyaFirst Published Apr 24, 2019, 4:23 PM IST
Highlights

இலங்கையில் எங்கே குண்டு வெடிப்பு பஞ்சாயத்துகள் நிகழ்ந்தாலும், அதில் எப்படியாவது அதில் தி.மு.க.வும் ஏதோ ஒரு பரபரப்பினுள் சிக்குவது வழக்கமாகி போய்விட்டது. ஈழ போர் விவகாரத்தில் தி.மு.க. அடைந்த நன்மையும், தீமையும் தெற்காசிய வரலாறு அறிந்த உண்மைகள். அதை விவரிக்க வேண்டிய அவசியமில்லை. 

இலங்கையில் எங்கே குண்டு வெடிப்பு பஞ்சாயத்துகள் நிகழ்ந்தாலும், அதில் எப்படியாவது அதில் தி.மு.க.வும் ஏதோ ஒரு பரபரப்பினுள் சிக்குவது வழக்கமாகி போய்விட்டது. ஈழ போர் விவகாரத்தில் தி.மு.க. அடைந்த நன்மையும், தீமையும் தெற்காசிய வரலாறு அறிந்த உண்மைகள். அதை விவரிக்க வேண்டிய அவசியமில்லை. 

இந்நிலையில், கடந்த ஞாயிறு அன்று இலங்கையில் தொடர் குண்டு வெடித்து, சுமார் 321 பேர் கடந்த செவ்வாயன்று வரை மாண்டிருக்கின்றனர். பல பேரின் நிலை கவலையளிக்கும் நிலையில் தொடர்கிறது. இந்நிலையில் என்று செய்த புண்ணியத்திலோ இந்த குண்டு வெடிப்பினில் சிக்காமல், எஸ்கேப் ஆகியிருக்கிறார் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்வராஜ். அந்த சிட்டியின் மாஜி மேயருமான இவர், திருப்பூர் நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் வெற்றிக்காக தாறுமாறாக கண்விழித்து ராப்பகலாக உழைத்தாராம். அந்த சோம்பல் நீங்கவும், புத்துணர்ச்சிக்காகவும் இலங்கைக்கு பயணம் சென்றிருக்கிறார். மொத்தம் 6 பேர் இந்த குழுவில் இருந்திருக்கின்றனர். 

கடந்த சனிக்கிழமையன்று இலங்கை சென்ற இவரது டீமுக்கு கொழும்புவில் குண்டு வெடித்த ஹோட்டலில் ஏழாவது மாடியில் அறையாம். ஞாயிறு அன்று காலையில் வெளியே செல்ல தயாராகி கொண்டிருந்தார்களாம். அப்போது இந்த பயங்கர சப்தமும், அதிர்வும் கேட்டிருக்கிறது. ஏதோ ரெஸ்டாரண்டில் சிலிண்டர் வெடித்துவிட்டது என்று முதற்கட்ட தகவல்கள் கேட்டிருக்கின்றன. ஆனால் சில நிமிடங்களில் குண்டு வெடித்து, பலர் செத்துக் கிடப்பது தெரிந்து ஆடிப்போயுள்ளனர். 

பாதுகாப்பை காரணம் காட்டி, ஹோட்டல் நிர்வாகம் இவரது டீம் உள்ளிட்ட அத்தனை பேரையும் உடனே வெளியேற்றிவிட்டது. வேறு எங்கேயுமே தங்குவதற்கு வழியில்லாமல் அல்லாடிய தி.மு.க. செயலாளர் டீம், வேறு வழியில்லாமல் திருப்பூருக்கு திரும்பி வந்துவிட்டது ஃபிளைட் பிடித்து. தாங்கள் தப்பிய புண்ணியத்தை பதைக்க பதைக்க எல்லோரிடமும் விவரித்துக் கொண்டிருக்கிறாராம் செல்வராஜ். அதற்கு அறிவாலய நிர்வாகிகள் சிலர் ”உங்களுக்குதான் சூலூர் இடைத்தேர்தல்ல பணி பொறுப்பு கொடுத்திருக்கிறோமே. அதை செய்யாம இலங்கைக்கு எதுக்குய்யா டூர் போனீங்க? தளபதியே இந்த அலைச்சல் அலைஞ்சுட்டும், ரெஸ்ட் இல்லாம இடைத்தேர்தல் பணிக்கு கிளம்புறாரு. நீங்க அவரை விடவா பெருசா உழைச்சுட்டீங்க? இத்தனைக்கும் திருப்பூர் நாடாளுமன்றத்துல நின்னது நம்ம கூட்டணி கட்சிதான்.” என்று கடிந்தனராம். 

இதில் கப்-சிப் என்று செல்வராஜ் இருக்க, ‘இவரு தங்குனது வேற ஓட்டல், சம்பவம் நடந்தது வேற ஹோட்டலாம். ஆனா ச்சும்மா பரபரப்புக்காக அங்கே தங்கியிருந்ததா சீன் போடுறாரு.” என்று உட்கட்சியிலேயே சிலர் கிளப்பிவிட, வேணும்னா பில்லை காட்டவா?....என்று கடுப்பாகிறாராம் செல்வராஜ்.

click me!