BREAKING NEWS திமுக மாவட்ட செயலாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை... அதிர்ச்சியில் ஸ்டாலின்.!

Published : Oct 28, 2020, 02:18 PM IST
BREAKING NEWS திமுக மாவட்ட செயலாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை...  அதிர்ச்சியில் ஸ்டாலின்.!

சுருக்கம்

திமுக கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திமுக கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாநகர் திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்து வருபவர் பையா கவுண்டர் என்னும் ஆர். கிருஷ்ணன். இவர் கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில், கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக எம்எல்ஏ ஆறுக்குட்டியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். கோவை மாவட்ட திமுகவில் முக்கிய நபராக இருந்து வரும் இவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். 

நேற்று உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட போராட்டத்தில் பையா கவுண்டர் பங்கேற்ற நிலையில், இன்று அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல், தமிழகத்தில் சென்னை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 22 இடங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி