DMK : 18ஆம் தேதி திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம்.. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு..

Published : Dec 12, 2021, 01:33 PM IST
DMK : 18ஆம் தேதி திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம்.. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு..

சுருக்கம்

வரும் டிசம்பர் 18ம் தேதி திமுக மாவட்டச்செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது என துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 18-12-2021 சனிக்கிழமை மாலை 5.30 மணி அளவில், சென்னை, “கலைஞர் அரங்கில்” நடைபெறும்.

அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று திமுக பொதுச்செயலாளர்  துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!