திமுக தோல்வி எதிரொலி... பழனி முருகனிடம் மண்டியிட்ட துர்கா ஸ்டாலின்..!! போகர் சன்னதியில் மனமுருகி தியானம்..!!

Published : Oct 30, 2019, 01:48 PM IST
திமுக தோல்வி எதிரொலி... பழனி முருகனிடம் மண்டியிட்ட துர்கா ஸ்டாலின்..!!  போகர் சன்னதியில் மனமுருகி தியானம்..!!

சுருக்கம்

அப்போது கோவில் துணை ஆணையர் செந்தில்குமார் துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை வரவேற்றார்.  அப்போது தூர்கா ஸ்டாலின் மூலவருக்கு பிரத்தியேக பூஜை செய்ததுடன் குடும்பத்தினரின் பெயரிலும் அர்ச்சனை செய்து கொண்டார்.  பின்னர் கோவில் நடையில் அமர்ந்த அவர் பயபக்தியுடன் தியானம் செய்தார்.   

திமுக தலைவர் மு க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் பழனி முருகன் கோயில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர், தன் குடும்பத்தினர் பெயரில் அர்ச்சனை செய்தார்.  திமுக தலைவர் மு க ஸ்டாலின் இந்துமத அரசியலை எதிர்த்து பேசிவரும் நிலையில். அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அவரது குடும்ப பெண்கள் சிலர் கோவில் பூஜை புனஸ்காரம் என  படு பிசியாக இருந்து வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலினை  அதிமுக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதைவைத்து கடுமையாக விமர்சித்து  வருகின்றனர். 

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின்,  கோவையில் இருந்து கார் மூலமாக நேற்று  பழனி முருகன் கோவிலுக்கு வந்தார்.  அவருடன் பழனி திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட பழனி திமுகவினர் வின்சு மூலம் மலைக்கோவிலுக்கு சென்றனர்.  அப்போது கோவில் துணை ஆணையர் செந்தில்குமார் துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை வரவேற்றார்.  அப்போது தூர்கா ஸ்டாலின் மூலவருக்கு பிரத்தியேக பூஜை செய்ததுடன் குடும்பத்தினரின் பெயரிலும் அர்ச்சனை செய்து கொண்டார்.  பின்னர் கோவில் நடையில் அமர்ந்த அவர் பயபக்தியுடன் தியானம் செய்தார்.

 

அப்போது திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர். வழிபாட்டுக்குப் பின்னர்.  இரவு பழனியில் உள்ள தனியார் விடுதியில் தங்கிய துர்கா ஸ்டாலின் இன்று காலை கார் மூலம் கோவை புறப்பட்டு சென்றார். இந்துமத அரசியலுக்கு எதிராக ஸ்டாலின் பேசுவரும் நிலையில் அவரின் மனைவியே கோவிலுக்கு சென்று பூஜை செய்துள்ளது சொந்தக் கட்சி மற்றும் எதிர்கட்சியினரால் ஆதரவாகவும் எதிராகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. 
 

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை