புதுச்சேரியில் தொகுதி பங்கீட்டிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட காங்கிரஸ்..! திமுக-காங்., இடையே ஒப்பந்தம் கையெழுத்து

By karthikeyan VFirst Published Mar 11, 2021, 7:53 PM IST
Highlights

புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதிப்பங்கீடு உறுதியாகி, கையெழுத்தானது.
 

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6ம் தேதியே புதுச்சேரியிலும் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு, ஆட்சிக்காலம் முடிவதற்குள்ளாகவே கவிழ்ந்த நிலையில், புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரம் காட்டிவருகிறது.

அதற்காக அதிமுக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் வலுவான கூட்டணியை அமைத்துள்ளது பாஜக. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் அனைத்துமே, புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக கூட்டணி 28 தொகுதிகளில் வென்று ஆட்சியமைக்கும் என தெரிவிக்கிறது.

தேர்தலுக்கு முன்பாகவே கிட்டத்தட்ட தோல்வி தெரிந்துவிட்ட திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது. இந்நிலையில், இன்று சென்னை அறிவாலயத்தில் இரு கட்சிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதையடுத்து, தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி, காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய 2 கட்சிகளும் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

2016 புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், இம்முறை 6 தொகுதிகளை குறைத்துக்கொண்டு 15 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட காங்கிரஸ் ஒப்புக்கொண்டது, தங்களுக்கு இதுவே போதும் என்பதை காங்கிரஸ் ஒப்புக்கொண்டதை காட்டுகிறது. மேலும் தோல்வியை தேர்தலுக்கு முன்பாகவே ஒப்புக்கொள்வதை பறைசாற்றும் விதமாகவும் அமைந்துள்ளது.
 

click me!