மத்திய அரசுக்கு எடப்பாடி போட்ட ரகசிய கடிதம்...!! முச்சந்தியில் வைத்து பங்கப்படுத்திய ஸ்டாலின்...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 22, 2020, 3:16 PM IST
Highlights

சிறுபான்மையினருக்கு எதிராக எந்த செயலையும் அதிமுக செய்யாது என்று அலறித் துடித்த இபிஎஸ் .  ஓபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிடுகின்றனர் .

குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்ததால் பெரும் தவறு செய்து விட்டோம் என்று முதல்-அமைச்சர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்  குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என அதிமுக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில் ஸ்டாலின் இதை வலியுறுத்தியுள்ளார் .  இதுதொடர்பாக ஸ்டாலின்  வெளியிட்டுள்ளார் அறிக்கையில் , தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்புக்கு அனுமதிக்கமாட்டோம் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் . 

சட்டப்பேரவையில் ஆவேச முழக்கம் எடுத்துவிட்டு தற்போது  தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் தாய் தந்தை பிறந்த இடம் போன்ற கேள்விகளை தவிர்க்க மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதுவது ஏன் என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார் . குடியுரிமை சட்டத் திருத்தத்தை  ஆதரித்த அதிமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் .  இந்நிலையில் குடியுரிமை சட்டம் குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார் ,  மத்திய அரசிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது உண்மை என்றால் அந்தக் கடிதத்தை ஏன் ரகசியமாக வைத்துள்ளார்கள் குடியுரிமை சட்டத் திருத்தத்தில் உள்ள அடிப்படை விவரங்களைக் கூட தெரிந்துகொள்ள  முதலமைச்சர் ஆர்வம் காட்டவில்லையா என ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

 

மத்திய அரசை எதிர்த்தால் ஊழல் வழக்குகளில் சிறை செல்ல வேண்டியிருக்கும் என்பதால் அதிமுக பதுங்கி நிற்கிறார் ,  சிறுபான்மையினருக்கு எதிராக எந்த செயலையும் அதிமுக செய்யாது என்று அலறித் துடித்த இபிஎஸ் .  ஓபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிடுகின்றனர் . இஸ்லாமியர்களுக்கு இடையே குழப்பம் ஏற்படுத்த திமுக முயற்சிப்பதாக முதல்வர் கூறியது கடும் கண்டனத்திற்குரியது .  நாடு எதிர்கொண்டுள்ள விபரீதமான பிரச்சனையில்கூட ஆட்சியாளர்கள் விளையாட்டுத்தனமாக அறிக்கை வெளியிடுகிறார்கள் என ஸ்டாலின் சாடியுள்ளார் .
 

click me!