
அரசு விழாவில் பங்கேற்க வந்த 3 திமுக எம்.எல்.ஏக்களை கைது செய்த 4 போலீசார் மீது நடவடிக்கை எடுக்ககோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் ரூ.231 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தலைமை நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த திமுக எம்.எல்.ஏக்கள் பெரியண்ணன் அரசு, ரகுபதி, சிவமெய்ய நாதன் ஆகியோரை போலீசார் வழி மறித்து கைது செய்தனர்.
இதையடுத்து விழாவில் கலந்து கொள்ளுமாறு அமைச்சர் விஜயபாஸ்கர் போனில் அழைப்பு விடுத்ததாகவும் அதனாலையே இங்கு வந்தோம் எனவும் திமுக எம்.எல்.ஏ ரகுபதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நிகழ்ச்சி அழைப்பிதழில் பெயர் இருந்தும் தங்களை போலீசார் கைது செய்ததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திமுக எம்.எல்.ஏக்கள் பெரியண்ணன் அரசு, ரகுபதி, சிவமெய்ய நாதன் ஆகியோர் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.