சீமானுக்கு எதிர்ப்பு... பலத்த கோஷங்களோடு விரட்டியடித்த திமுகவினர்

 
Published : Jul 29, 2018, 12:35 PM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
சீமானுக்கு எதிர்ப்பு... பலத்த  கோஷங்களோடு விரட்டியடித்த திமுகவினர்

சுருக்கம்

dmk carders opposition to Seeman

சீமானுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக திமுகவினர் கோஷங்களை எழுப்பி எதிர்ப்பை தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க., தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை குறித்து கேட்டறிவதற்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அப்போது திமுக தொண்டர்கள் சீமானுக்கு எதிராக சீமான் ஒழிக... சீமான் ஒழிக என  கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை காட்டினர்.

இதற்க்கு முன்னதாக நேற்று, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பேஸ்புக் உள்ளிட்ட எந்த சமூக இணையதளங்களிலும் எதிர்மறை கருத்துகளை நாம் தமிழர் கட்சியினர் பதிவிடக்கூடாது. பதிவிட்டால் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர் கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும். அவர் உடல்நிலை தேறி மீண்டும் அரசியல் தளத்தில் பணியாற்ற வேண்டும், என அறிக்கை வெளியிட்டது குறுப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தின் பாதுகாப்புக்கும், செழிப்புக்கும் இந்தியாவுக்கு நன்றியோடு இருங்கள்..! யூனுஷுக்கு ஷேக் ஹசீனா எச்சரிக்கை.!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!