பிரச்சாரத்தில் ஜோக் அடிக்கும் வேட்பாளர்... தாறுமாறு வாக்குறுதியை அள்ளிவிட்ட செந்தில்பாலாஜி..!

By Vishnu PriyaFirst Published Apr 29, 2019, 3:34 PM IST
Highlights

அரவக்குறிச்சி தொகுதியில் அவர் பிரசாரத்தில் அள்ளி விடும் வாக்குறுதிகளைப் பார்த்து, அவரை வெச்சு செய்கின்றனர் விமர்சகர்கள். அப்படி என்ன சொன்னார் செந்தில்?...... “என் தொகுதி மக்களை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. அவர்களுக்கு நிலையான எம்.எல்.ஏ.வாக இருந்து சேவை செய்ய துடிக்கிறேன். ஆனால் சில கயவர்கள் தடுக்கிறார்கள். 

மாஜி  மாண்புமிகு செந்தில்பாலாஜின் அரசியல் சித்து விளையாட்டுகளெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு இன்ச் பை இன்ச் அத்துப்படி. அவர் எந்த நேரத்தில் எப்படி ரூட்டை மாற்றுவார், எந்த ரூட்டில் எப்படி நின்று பேசுவார் என்பதெல்லாம் ‘விடுங்க பாஸ் பார்த்தாச்சு, பார்த்தாச்சு.’ ரகங்கள்தான். 

இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் அவர் பிரசாரத்தில் அள்ளி விடும் வாக்குறுதிகளைப் பார்த்து, அவரை வெச்சு செய்கின்றனர் விமர்சகர்கள். அப்படி என்ன சொன்னார் செந்தில்?...... “என் தொகுதி மக்களை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. அவர்களுக்கு நிலையான எம்.எல்.ஏ.வாக இருந்து சேவை செய்ய துடிக்கிறேன். ஆனால் சில கயவர்கள் தடுக்கிறார்கள். 

இந்த தொகுதியில் ஒரே வீட்டில் இரண்டு மூன்று குடும்பங்கள் வசிக்க வேண்டிய ஏழ்மை சூழ்நிலை உள்ளது. நான் இங்கே மீண்டும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானால் இருபத்தைந்தாயிரம் குடும்பங்களுக்கு தலா மூன்று சென்ட் நிலத்தை வழங்குவேன். தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிப்படி அவர்களுக்கு வீடும் கட்டிக் கொடுக்கப்படும்.” என்றார். நிலம் தருகிறேன், வீடு கட்டிக் கொடுப்பேன்...என்று சொன்னால் மக்கள் கண்ணை மூடிக்கொண்டு வாக்குகளை அள்ளிப்போட்டு தன்னை ஜெயிக்க வைப்பார்கள் என்பது செந்திலின் கணக்கு. 

ஆனால் அரசியல் விமர்சகர்கள் சிலர் தங்களது சமூக வலைதளத்தில் “அட போங்க செந்தில், ச்சும்மா கவுண்டமணி மாதிரி காமெடி பண்ணாதீங்க. இந்த வாக்குறுதியை நீங்க வேற எங்கேயோ ஒரு கட்சியில இருந்துகிட்டு சொல்லியிருந்தாலும் கூட மக்கள் திரும்பியாச்சும் பார்த்திருப்பாங்க. ஒருவேளை நம்பலாமா? நமக்கு இலவசமா வீடு கிடைக்குமா?ங்கிற எண்ணத்துல ஓட்டு போடுறதைப் பத்தி யோசிச்சிருப்பாங்க. ஆனால், நீங்க இப்ப நின்னுட்டு இருக்கிற இடம் தி.மு.க. ஏற்கனவே கடந்த தி.மு.க. ஆட்சியானது ‘ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர்  இலவச நிலம் வழங்கப்படும்.’ அப்படிங்கிற வாக்குறுதியை அள்ளி வீசிட்டு அமர்ந்தது. 

ஆனால் அதை நிறைவேத்தவில்லை. ஏழை விவசாயிகள் உருண்டு புரண்டு பார்த்தும் அந்த சலுகை கிடைக்கலை. 
அப்படியாப்பட்ட கட்சியின் வேட்பாளரா இருந்துகிட்டு, அதுவும் எதிர்கட்சியா இருக்கிற அந்த கட்சியில் இருந்தபடி நீங்க இந்த டயலாக்கை பேசுனா எவன் நம்புவான்?” என்று நறுக்கென்று எழுதிவிட்டனர். அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. தரப்போ இந்த பதிவை பல ஆயிரக்கணக்கான அரவக்குறிச்சி வாக்காளர்களுக்கு வாட்ஸ் அப்பில் ஷேர் செய்துவிட்டது. வாசித்து பார்த்த பலர் ‘நெசமாதானே சொல்லியிருக்காங்க! செந்தில் சொல்றதெல்லாம் நம்புற மாதிரியா இருக்குது?’ என்று கடுப்பாகி கமெண்ட் அடித்துள்ளனர். இது செந்தில்பாலாஜியின் காதுகளுக்குப் போக...மனுஷன் செம்ம அப்செட்டாம்.

click me!