அனைவரையும் கடாசித் தள்ளிய திமுக வேட்பாளர்... சரித்திர சாதனை வெற்றி..!

Published : May 03, 2021, 10:28 AM ISTUpdated : May 03, 2021, 10:43 AM IST
அனைவரையும் கடாசித் தள்ளிய திமுக வேட்பாளர்... சரித்திர சாதனை வெற்றி..!

சுருக்கம்

திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி மிக அதிகபட்சமாக 1,34,082 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எதிர்த்து நின்றவர்களை டெபாசிட் இழக்கச் செய்துள்ளார் .

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி மிக அதிகபட்சமாக 1,34,082 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எதிர்த்து நின்றவர்களை டெபாசிட் இழக்கச் செய்துள்ளார்

.

தமிழக தேர்தல் வரலாற்றில் மிகப்பெரும் சாதனை இது. எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். தி.மு.க வேட்பாளர் ஐ.பெரியசாமி 1,63,689 வாக்குகளும், பா.ம.க வேட்பாளர் திலகபாமா 29,607 வாக்குகளும் பெற்றுள்ளனர். தி.மு.க வேட்பாளர் ஐ.பெரியசாமி 1,34,082 வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இதன்மூலம் தமிழகத்திலேயே மிகஅதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றவராக தி.மு.க-வின் ஐ.பெரியசாமி இருக்கிறார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வின் முன்னாள் முக்கிய அமைச்சரான நத்தம் விஸ்வநாதனை தோற்கடித்து வென்ற நிலையில், இந்த முறை வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளார் ஐ.பெரியசாமி.

PREV
click me!

Recommended Stories

ஈரோட்டில் செம்ம மாஸ் காட்டும் செங்கோட்டையன்..! மாநாட்டை மிரட்டி காட்டப் போவதாக ஆவேசம்
234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..