திமுக ஏன் பி.ஜே.பி.யுடன் கூட்டு வைக்கக்கூடாது....! டிகேஎஸ் டிஸ்மிஸ் குறித்து பகீர் தகவல்கள்!

By vinoth kumarFirst Published Oct 20, 2018, 11:28 AM IST
Highlights

வாடிப்பட்டியில மழை கொட்டுனா, வாரணாசியில ஏன் வெள்ளம் வருதுன்னு புரியலையே மச்சான்?! என்கிற புதிர் அப்படியே பொருந்திப் போகிறது இந்த அரசியல் மேட்டருக்கு. விஷயம் இதுதான்.

வாடிப்பட்டியில மழை கொட்டுனா, வாரணாசியில ஏன் வெள்ளம் வருதுன்னு புரியலையே மச்சான்?! என்கிற புதிர் அப்படியே பொருந்திப் போகிறது இந்த அரசியல் மேட்டருக்கு. விஷயம் இதுதான்....தி.மு.க.வின் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து டி.கே.எஸ். இளங்கோவன் நீக்கப்பட்டார் இல்லையா. இந்த விவகாரம் தி.மு.க.வில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது சப்தமில்லாமல். கருணாநிதி காலத்தில் பொதுவாக தி.மு.க.வில் முக்கிய தலைகள் மீது இப்படி அதிரடி ஆக்‌ஷனெல்லாம் தடாலென இறங்கிடாது. 

விளக்க கடிதம், விசாரணை, சோகாஸ் நோட்டீஸ் என்று நிறைய இருக்கின்றன. அனால் ஸ்டாலின் தலைவரானதும் எல்லாம் மாறுகிறது. 
சரி அது இருக்கட்டும், இப்போது முதல் வரி புதிருக்கு இப்போது வரலாம்! டி.கே.எஸ். இளங்கோவன் நீக்கப்பட்டதை பி.ஜே.பி. அதிலும் டெல்லி பி.ஜே.பி. சற்றே கவலையுடன் தான் பார்க்கிறதாம். காரணம், தங்களுக்கும் தி.மு.க.வின் தலைமைக்கும் இடையில் ஒரு இன்விசிபிள் கருத்து பாலமாகவே அவர் இருந்தார் என்று பி.ஜே.பி. நம்பியது. 

அ.தி.மு.க.வை தாங்கிப்பிடித்து அதன் ஆட்சியை தமிழகத்தில் ஓடவைக்க பி.ஜே.பி. தோள் கொடுப்பது உண்மைதான். ஆனால் சரிந்து கிடக்கும் அக்கட்சியின் செல்வாக்கை கண்டு கடுப்பான பி.ஜே.பி. தலைமை தி.மு.க.வுடன் அனுசரணை போக்கை சில வாரங்களுக்கு முன் மேற்கொண்டது. இதற்கான விஷயங்களில் டி.கே.எஸ். இளங்கோவன் பெரியளவில் கைகொடுத்தாராம். ’ஏன் பி.ஜே.பி.யுடன் நாம் கூட்டு வைக்க கூடாது?’ எனும் கோணத்தில் தர்க்கங்களை இளங்கோவன் தி.மு.க.வின் உயர்மட்ட குழு நபர்களிடம் கேஷுவலாக வைத்ததாகவும் தகவல். 

ஆக தி.மு.க. கூட்டணிக்குள் பி.ஜே.பி. நுழைந்திட வழி வெட்டிவிடும் மண்வெட்டியாகவே இளங்கோவன் பார்க்கப்பட்டிருக்கிறார். ஆனால் திடீரென ஸ்டாலின் அவரை தூக்கி வீசியது டெல்லி லாபியை டென்ஷனாக்கியிருப்பதோடு, கவலைப்படவும் வைத்துள்ளது. ‘என்னாச்சு? ஏன் நடந்துச்சு இந்த துரதிர்ஷ்டம்?’ என்று இளங்கோவனுக்கு தி.மு.க. நிர்வாகிகளை விட பி.ஜே.பி.யின் டெல்லி நிர்வாகிகள்தான் அதிகமாக கவலைப்பட்டு விசாரிக்கிறார்கள் என தகவல். சர்தான்!

click me!