தே.மு.தி.க.வில் பிரேமலதாவுக்கு திடீர் பதவி! பரபரப்பு பின்னணி!

By vinoth kumarFirst Published Oct 20, 2018, 9:37 AM IST
Highlights

தே.மு.தி.கவில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கு திடீரென பொருளார் பதவி கொடுக்கப்பட்டதன் பின்னணி குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

தே.மு.தி.கவில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கு திடீரென பொருளார் பதவி கொடுக்கப்பட்டதன் பின்னணி குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. தே.மு.தி.க உருவாக்கப்பட்ட போது கட்சியின் தலைவராக விஜயகாந்த் செயல்பட ஆரம்பித்தார். தனது ரசிகர் மன்றத்திற்கு தலைவராக இருந்த ராமு வசந்தனை தே.மு.தி.க பொதுச் செயலாளராக கேப்டன் நியமித்தார். மேலும் பொருளாளராக தனது நீண்ட கால நண்பர் சுந்தர்ராஜனுக்கு பொறுப்பு கொடுத்தார் கேப்டன். ராமுவசந்தன் மறைவுக்கு பிறகு பொதுச் செயலாளர் பதவியை விஜயகாந்த் யாருக்கும் கொடுக்கவில்லை.

 

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக விஜயகாந்தே தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டு வந்தார். இதே போல் சுந்தர்ராஜன் அ.தி.மு.கவிற்கு சென்ற பிறகு தே.மு.தி.க பொருளாளர் பதவி ஏ.ஆர்.இளங்கோவனுக்கு கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு பொறுப்புகளில் மாற்றம் செய்த விஜயகாந்த், தனது தலைவர் பதவியை பொறுப்பில் இருந்து அகற்றிவிட்டு, பொதுச் செயலாளர் பதவியில் மட்டும் நீடித்து வருகிறார். விஜயகாந்த் அனுப்பும் அறிக்கைகளில் எல்லாம் பொதுச் செயலாளர் என்றே கையெழுத்தும் இடம்பெற்றுள்ளது.

  

மேலும் பொருளாளர் பதவியில் இருந்து ஏ.ஆர்.இளங்கோவனை மாற்றிவிட்டு சேலத்தை சேர்ந்த டாக்டர் இளங்கோவனை பொருளாளராக நியமித்தார். இந்த நிலையில் தான் திடீரென தே.மு.தி.க பொருளாளராக பிரேமலதாவை நியமித்து விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். தே.மு.தி.க ஆரம்பித்தது முதல் கட்சியில் அடிப்படை உறுப்பினராக மட்டும் இருந்தவர் பிரேமலதா. பலரும் கூட பிரேமலதா தே.மு.தி.கவினி மகளிர் அளி தலைவி என்றும் மகளிர் அணி செயலாளர் என்றும் கருதுவது உண்டு. பிரபல தொலைக்காட்சிகள், செய்தித்தாள்கள், வார இதழ்கள் கூட பிரேமலதாவை மகளிர் அணி தலைவி என்று தவறுவதலாக குறிபிட்டு செய்திகள் வெளியிட்டதும் உண்டு. இதற்கு காரணம் கட்சி மாநாடு, பொதுக்குழு போன்றவற்றில் பிரேமலதா கட்சி புடவையில் பங்கேற்பது தான். 

இதுநாள் வரை தேர்தல் பிரச்சாரம், பொதுக்குழு, மாநாடு போன்றவற்றில் மேடை ஏறி பேசியதோடு வெளிப்புற அரசியலை பிரேமலதா முடித்துக் கொண்டார். ஆனால் தேர்தல் கூட்டணி, நிர்வாகிகள் நியமனம் மற்றும் கட்சியின் வரவு செலவு போன்றவற்றை மறைமுகமாக பிரேமலதாவை பல ஆண்டுகளாக நிர்வகித்து வந்தார். இந்த நிலையில் திடீரென அவருக்கு பொருளாளர் பதவி கொடுக்கப்பட வேண்டியது ஏன் என்கிற ஒரு கேள்வி எழுந்தது.

 

இது குறித்து விசாரித்த போது தான் கேப்டன் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்பதே பிரேமலதாவின் திடீர் பதவிக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. மேலும் சிகிச்சைக்கும் கேப்டன் உடல் ஒத்துழைக்கவில்லை என்கிறார்கள். இந்த நிலையில் கட்சியை வழிநடத்திச் செல்ல ஒரு பதவி வேண்டும் என்று பிரேமலதா கருதியதாகவும் அதற்காகவே அவருக்கு பொருளாளர் பதவி கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதே போல் கேப்டனின் மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் காலடி எடுத்து வைத்தன் பின்னணியலும் கேப்டனின் உடல் நிலை தான் இருக்கிறது என்கிறார்கள்.

click me!