மு.க. ஸ்டாலினுடன் கைகோர்க்க எடப்பாடி பழனிச்சாமி திடீர் முடிவு... எதற்காக எனத் தெரிந்தால் ஆச்சரியப்பட்டுபோவீர்கள்!

By Asianet TamilFirst Published Jul 6, 2019, 7:40 AM IST
Highlights

ஒரு மனுவை தயாரித்து அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளின் எம்.பி.களும் ஒன்றாகச் சேர்ந்து பிரதமரை சந்தித்து அழுத்தம் கொடுப்போம். அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்தப் பிரச்சினை பற்றி கேள்வி எழுப்பி இதை தடுத்து நிறுத்த முயற்சிப்போம். இதற்கு ஆக்கபூர்வமாக எங்களுடைய அரசும், அதிமுகவும் ஒத்துழைப்பு வழங்கும்” என்று தெரிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி.
 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரில் செயல்பட்டுவரும் உருக்காலையைக் காப்பாற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் கைகோர்க்க எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டார்.
சேலம் உருக்காலை தனியாருக்கு விற்பது தொடர்பாக மத்திய அரசு சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. சுமார் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சேலம் உருக்காலைக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமை தொடர்பாக சட்டப்பேரவையிலும் விவாதிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், திமுக தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான  மு.க.ஸ்டாலின், சேலம் உருக்காலை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
 அப்போது பேசிய அவர், “பல்வேறு காரணங்களால்,சேலம் உருக்காலை நஷ்டம் அடைந்ததாக 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆலையைத் தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் டெண்டர் எடுக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசின் இந்த விரோத போக்கை தடுத்து நிறுத்த வேண்டும். சேலம் உருக்காலை தனியாருக்கு செல்வதை தடுத்து நிறுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரை நேரில் சந்தித்து வற்புறுத்த வேண்டும். அவருடன் செல்ல திமுக எம்பிக்களும் தயாராக இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.


உடனே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனே பதில் அளித்தார். “நீங்கள் (மு.க. ஸ்டாலின்) சொல்லியதைப்போல எங்களுடைய எம்.பி.களும் உங்களுடைய எம்.பி.களும் சேர்ந்து முதல்கட்டமாக பிரதமரையும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையும் சந்தித்து பேசுவோம். இதுதொடர்பாக ஒரு மனுவை தயாரித்து அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளின் எம்.பி.களும் ஒன்றாகச் சேர்ந்து பிரதமரை சந்தித்து அழுத்தம் கொடுப்போம். அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்தப் பிரச்சினை பற்றி கேள்வி எழுப்பி இதை தடுத்து நிறுத்த முயற்சிப்போம். இதற்கு ஆக்கபூர்வமாக எங்களுடைய அரசும், அதிமுகவும் ஒத்துழைப்பு வழங்கும்” என்று தெரிவித்தார்.
சேலம் மாநகரின் அடையாளங்களில் ஒன்றான உருக்காலையைக் காப்பாற்ற திமுகவும் அதிமுகவும் இணைந்து செயல்பட முடிவு எடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பாராட்டையும் பெற்றுள்ளது.

click me!